வாழ்க்கைதான் முதன்மையானது. ஆம். அதை வாழும் மாந்தனை விடவும் வாழ்க்கைதான் முதன்மையானது. இது ஓர் உண்மை.
நம்பவில்லையா நீங்கள்?
அப்படித்தான் என்றால்,
தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையில் அண்மையிலொரு மாலைப்பொழுதில் வந்த செய்தியைப் பார்த்திருக்கவோ, அதுபற்றி இதுவரை கேட்டிருக்கவோ மாட்டீர்கள். கேட்டிருந்தால் நன்றி.
தமிழறிஞர் மா.சு.சம்பந்தன் அவர்கள், அச்சும் பதிப்பும் உட்பட்ட துறைகளில் பெரும் வல்லுநர். அதே தலைப்பு முதலான - தலைப்புகள் பலவற்றின்கீழ் அவர்தம் நூல்கள் பல வெளிவந்தன. நம் பல்கலைக் கழகங்களின் இளங்கலை, முதுகலைப் பாடத் திட்டங்களில் வைக்கப்பெற்றன. அருமையான, பயன் மிகுந்த நூல்கள்.
நானும் அவற்றைக் கருத்தூன்றி வாசித்திருக்கிறேன்.
புதுச்சேரியிலுள்ள தாகூர் அரசினர் கலைக் கல்லூரியின் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கும்; காரைக்கால் பேரறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியின் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கும்; புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி இளங்கலை மாணாக்கியருக்கும் கற்பித்திருக்கிறேன்.
அப்படிப்பட்ட நூல்களின் ஆசிரியர், தமிழ்நாட்டரசின் விருதுகள் பெற்றிருக்கிறார். தினத்தந்தி நாளேடு வழங்கிய சிறப்பு விருதையும் பணமுடிப்பையும் ஏற்றிருக்கிறார். இன்னும் பல பாராட்டுகள், மற்றும் பிற...
சென்ற செப்டம்பர் மாதக் கடைசிக் கிழமையொன்றில் மாலைப்பொழுதிலொரு நிகழ்ச்சிக்குச் சென்றவர், நான் செய்தி கண்டு கேட்ட இதுவரை இல்லம் திரும்பவே இல்லையாம்.
பழமையைப் பெயரில் கொண்ட - ஊடகங்களுக்கு 'வேண்டிய'வர் ஒருவரை நேர்கண்டு ஒளிபரப்பினார்கள். நெஞ்சு கனத்தது.
பின்வரும் வினாக்களை அந்த நேர்காணல் எழுப்பியது.
முகம் தெரியாமல் போனவரா அவர்?
முகவரி இல்லாமல் வாழ்ந்தவரா அவர்?
ஐயா! உங்களால் நினைத்துப் பார்க்க முடியாத அளவு ‘நினைக்கப் பட்டவர்’ அவர். ஏன்.. உங்களுக்குத்தான் பெரியவர்களின் ‘சகவாசமும்’ பேரளவு இலக்கிய இதழ்களின் உறவும் ஊடகங்களின் கூட்டுறவும் இருக்கிறதே...
அவர் முகத்தை நீங்களாவது விளம்பரப்படுத்தி இருக்கலாமே..நீங்கள் எதிர்பார்க்குமளவுக்கு...
ஊடகம் நேர்கண்டால் என்ன வேண்டுமானாலும் பேசி விடுவதா?
“உங்களை விட அவரை எனக்கு அதிகம் பழக்கம்!” என்று உரிமை கொண்டாடுகிறீர்களா? ஒதுங்கிக் கொள்கிறேன். நல்ல வேளையாக இந்தப் ‘பாவ’த்தில் எனக்குப் பங்கில்லை என்றும் எண்ணிக் கொள்கிறேன்.
ஊடகங்கள்... உரியவர்களை நேர்காணத் தெரியாதவை.
அவர் மகன் சொன்னவற்றையும் கண்டேன்; கேட்டேன். கலங்கிப் போயிருந்தார்.
உண்மை...
அது
தமிழறிஞர் மா.சு.சம்பந்தனார்.. வாழ்க்கைக்குத்தான் தெரியும்.
*** *** ***
(இன்று காலை, நண்பர் தமிழ்த்திரு மறைமலை சி. இலக்குவனார் அவர்களுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த பொழுது, அவர் மா.சு.ச. குறித்து மொழிந்த செய்திகள் மேலும் மிகுந்த கழிவிரக்கத்தை ஏற்படுத்தின.)
6 comments:
தமிழறிஞர்களை பற்றி கவலை இல்லாதவர்கள் யார் தெரியுமா.. தமிழறிஞர்கள்தான்.. கையில் மொபைல் வைத்திருப்பவர்களைப் பார்த்துக் கெக்கலி சிரிப்பு சிரிக்கிறவர்கள் மேற்படியாளர்கள்.
வேதனையுடன்
தோ.ஆரோக்கியராஜ்
வேப்பேரி
சென்னை-7.
மிகவும் திறமையானவர். சென்னை மியூசிக் அகாடமி நிகழ்ச்சிக்குப் போனவர் திரும்பவில்லை என்று சொன்னார்கள்.
காணாமல் போன தமிழறிஞர் பற்றி இங்குள்ளவர்களுக்குச் சொன்னேன் :
அனைவரும் வருத்தம் அடைந்தனர்.
கம்பன் விழாவின் போதும் இச்செய்தி பற்றி மேடையில் குறிப்பிட்டேன்.
அவர் பற்றிய செய்தியைத் தாளிகையில் தேடினேன் ...
எதுவும் கிடைக்கவில்லை.
தரங்கெட்ட (புதுவை) கல்வி அமைச்சரைத் தேடிக் காக்கைச் சட்டைகளைப் புதுவையில் குவிக்கும்
அம்மையார், காணாமல் போன தமிழறிஞரைத் தேடச் சொல்லிக் காவலர் எவரையேனும் அனுப்பினாரா?
இன்றைய தமிழறிஞர்கள் நாளை காணாமல் போகாதவாறு தமிழன்னை தான் காக்கவேண்டும்
அன்புடன்
பெஞ்சமின் லெபோ, பிரான்சு
வணக்கம்.
நன்றி.
பிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா – இரண்டாம் நாள் விழா”வை நேரிலிருந்து கண்டு கேட்டு மகிழவைத்தது என் நண்பர் பேராசிரியர் பெஞ்சமின் இலெபோவின் வண்ணனை. கடவுச்சீட்டு, இருப்பிசைவுத் தொல்லைகள், பயணச் செலவுகள் ஆகியவற்றை எனக்கில்லாமற் செய்த நண்பர் புதுவை எழிலுக்கும் அவருடன் இருந்து பணியாற்றும் அத்தனை நண்பியர் நண்பர்களுக்கும் நன்றி. பாராட்டுகள்.
நனிநன்றியன் பெஞ்சமின் லெபோ has left a new comment on your post "காணாமல் போன தமிழறிஞர் / வாழ்க்கைதான் கடவுள்!":
காணாமல் போன தமிழறிஞர் பற்றி இங்குள்ளவர்களுக்குச் சொன்னேன் :
அனைவரும் வருத்தம் அடைந்தனர்.
கம்பன் விழாவின் போதும் இச்செய்தி பற்றி மேடையில் குறிப்பிட்டேன்.
அவர் பற்றிய செய்தியைத் தாளிகையில் தேடினேன் ...
எதுவும் கிடைக்கவில்லை.
தரங்கெட்ட (புதுவை) கல்வி அமைச்சரைத் தேடிக் காக்கைச் சட்டைகளைப் புதுவையில் குவிக்கும்
அம்மையார், காணாமல் போன தமிழறிஞரைத் தேடச் சொல்லிக் காவலர் எவரையேனும் அனுப்பினாரா?
இன்றைய தமிழறிஞர்கள் நாளை காணாமல் போகாதவாறு தமிழன்னை தான் காக்கவேண்டும்
அன்புடன்
பெஞ்சமின் லெபோ, பிரான்சு
Post a Comment