20.12.15

http://www.fondation-janmichalski.com/en/prix-jan-michalski/ பரிசாகட்டும்; இருண்மை இல்லாமல் அப்படியே 'பட்டவர்த்தனமாக'வும் 'அ(ம்)மணமாகவும்' --'இடக்கரடக்கல்' 'அவாய்நிலை' ஆகிய இலக்கணங்களைக் கிஞ்சிற்றும் மதிக்காத transgressive என்னும் ஐரோப்பிய இலக்கிய வகையாகட்டும்; அதில் கரைகண்ட கேத்தி ஆக்கர் முதல் தமிழில் சாரு வரை - ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சொன்ன, அவர் பொழிவுகளில் முதற்பகுதியாய் இலங்குகிற ' சுற்றுமுற்றும் நிகழ்கணங்களில் அவதானிக்கிற ஒவ்வொன்றையும் எழுத்துசொல் அமைப்பில் பதிகிற' நோக்கிலக்கிய(observant) வகை எழுத்தில் முழுமை பெறாதவர்களே. சுந்தர ராமசாமி படைத்த 'ஜேஜே சில குறிப்புகள்'- இவ்வகை. துணிவும் அர்ப்பணிப்புணர்வுமுள்ள பெண்கள் இந்தவகை இலக்கியத்தை முன்னெடுக்க வந்தால், இலக்கியவகையிலாவது ஆணாதிக்கத்தின் 'டங்குவார்' கிழியும்!
# observant not transgressive

17.11.15

அண்மைய முகநூல் பதிவுகள் சில - தேவமைந்தன்

Facebook Puducherry Devamaindhan Wednesday, November 18, 2015

வாழ்வாயினும் சரி, முகநூலாயினும் சரி, நாம்போடும் கணக்குகள் முற்றிலும் தோற்றுப்போகின்றன. கடனே என்று விருப்பம் பதிகிறவர்கள், முகத்துதியாகத் தொடர்ந்து கருத்தூட்டம் போட்டு ஏமாற்றுபவர்களை இனங்கண்டு கொள்ளவே முடியாது. நம்மை எரிச்சலூட்டுபவர்கள், நம்மேல் அக்கறைகொண்டவர்களாக இருக்கலாம். நமக்கு வழலை போடுகிறவர்கள், அடுத்துக் கெடுப்பவர்களாக இருக்கலாம். சான்றாக என் முகநூல் நண்பர் ஒருவர், புதுச்சேரியில் வாழ்பவர், எனக்கு விருப்பம் பதிந்ததே இல்லை.. ஆனால், சந்திக்கும்பொழுதும் அலைபேசியில் பேசும்பொழுதும் பாராட்டவேண்டும் என்று தனக்குத் தோன்றியவற்றைப் பாராட்டுவார். கடவுளைப் புரிந்துகொள்ள முடியும். சகமனிதர்களைப் புரிந்து கொள்ளவே முடியாது.

நேற்று:

ஆர்வக்கோளாறுகளையும் மனவழுத்தத்தையும் எதிர்த்துப் போராடாமல் நட்புகளாக்கிக் கொண்டு வாழ்வது குறித்த சித்திரக்கதை!
http://idealist4ever.com/comic-explains-why-anxiety-depression-are/

நேற்று-விடிவதற்கு முன் 03:32 am:

எம் மகளார் ஒரு கேள்வி கேட்டார்: " மலரும் நினைவுகளோ அப்பா?" என்று. என் மூளை, எனக்கு நெருங்கிய ஆதரவு தருவது. கசப்பான எதையும் மறந்து விடுவேன். பழக்கமானவர்கள், சிறு பிள்ளையானாலும், ஞாயமாகச் சுட்டிக்காட்டினார்கள் என்றால் என் தவறுகளைத் திருத்திக் கொள்வேன். எவ்வளவு நலமில்லாவிட்டாலும், வாசிப்புப் பழக்கத்தை விடமாட்டேன். முடியாவிட்டாலும், விடியலுக்கடுத்து ஒரு சிறு நடை போய்வந்துவிடுவேன். நினைவு தெரிந்தது முதல், என்னுடன் பழகிய எவரையும் மறந்ததில்லை. ஆனாலும் பெயர்களை மாற்றிச்சொல்லும் ('தெனாலி'படம்) சிக்கல் எப்படியோ வந்துவிட்டது. நண்பர்கள் நாயகரும் அருணனும் தாம் அதைச் சுட்டினார்கள். எத்தனையோ பின்னடைவுகள், சாண் ஏற முழம் சறுக்கல்கள், பழிபாவங்களுக்குமிடையில் ஜீவனுடன் ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழ்கிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் திருவருளாலும் குருவருளாலும் மகளார் சுட்டிய 'மலரும் உடன்பாட்டு எண்ண நினைவுகள்தாம்.'


பால்பேதமே இயற்கையின் படைப்புதான். தட்பவெப்ப வேறுபாடுகளிலும் பால்பேதமேன்?

Climate change is not gender-neutral

4.11.15

குமுதம் தீராநதி நேர்காணல்: நண்பர் முனைவர் சு.ஆ.வெ. நாயகர்

நேர்காணல்:
பிரஞ்சுமொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஈடுபாடு உங்களுக்கு எப்படி வந்தது?

புதுச்சேரிக்கும் பிரஞ்சுக்குமான தொடர்பு உங்களுக்கு நன்றாகத் தெரியும்.பலரைப்போல்நானும்+2 வரைபிரஞ்சு மொழியை விருப்பப் பாடமாக எடுத்து படித்தேன்.அந்தக்காலக்கட்டத்தில்சிறப்புவகுப்புகளுக்குசென்றுபயிலும்வாய்ப்புஎன்நண்பர்சுப்பிரமணிவாயிலாககிடைத்தது. பிரஞ்சுப்படைப்புகளுடனானதொடர்பு, அம்மொழியின்ஓசைநயம்என்னைஈர்த்துவிட்டன. பிறகு பிரஞ்சுமொழியில்இளங்கலை, முதுகலை பட்டம்முடித்தேன். பிரஞ்சு-தமிழ்வினைத்தொகைளைஒப்பாய்வுசெய்துபேராசிரியர்இரா. வெங்கட்டராமன்நெறியாள்கையில்இளம்முனைவர்பட்டம்பெற்றேன்.முனைவர்பட்டஆய்வுக்குசுவிட்சர்லாந்தைசேர்ந்தபிரஞ்சுஎழுத்தாளர்‘பிலேஸ்சாந்த்ரார்புதினங்களில்விலகித்தப்புதல்எனும்பொருள்கோள்’ தலைப்பில்பேராசிரியர்இரா.கிருஷ்ணமூர்த்தியின்நெறியாள்கையில்ஆய்வினைசெய்துமுடித்தேன்.

 நீங்கள் எப்படி மொழிபெயர்ப்புத்துறைக்குவந்தீர்கள்?

தொடக்கத்தில்பொழுதுபோக்காகவும்பின்னர்பயிற்சியாகவும்மொழிபெயர்ப்பினைச்செய்துவந்தேன். பிறகு, அதில்உள்ளசவால்களும், சுவாரசியங்களும்அப்பணியைச்செய்துமுடிக்கும்போதுகிடைக்கும்மனநிறைவும்என்னைத்தொடர்ந்துஇயக்கிவருகின்றன.

 பிரஞ்சு மொழிக் கதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள்.மொழிபெயர்ப்பிற்கு எத்தகைய படைப்புகளைத் தெரிவு செய்வீர்கள்? அந்த அனுபவத்தை சொல்லுங்கள்.
என்னைக்கவர்ந்தஎந்தபடைப்பாகஇருந்தாலும், அதைநம்வாசகர்களிடம்அதேவனப்புடன்கொண்டுசெல்லமுடியுமாஎன்பதைமுதலில்எண்ணிப்பார்ப்பேன்.படிக்கும் வாசகர்களுக்கு மொழிபெயர்ப்பு பிரதியை புரிந்து கொள்வதில் எவ்வித தடையும் இல்லாமல் பார்த்து கொள்வேன். மொழிநடை ஒருபுறமிருக்க, பண்பாட்டுக் கூறுகள் இத்தெரிவில் முக்கிய பங்கு வகிக்கும். எனவே வாசிப்பில் நெருடல்கள் இல்லாத கதைகளாகத் தெரிவு செய்வேன். எடுத்துக்காட்டாக நான் மொழிபெயர்த்த சில கதைகளைச் சொல்லலாம்.
செருப்பு ஜோடி ஒன்றை கணவன் மனைவியாக்கி புனையப்பட்ட “ஜோடிப் பொருத்தம்”, உயர்காவல் அதிகாரியின் இடதுகை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் ஏற்படும் சிக்கலை சுவையாக எடுத்துச் சொல்லும் “கலகம் செய்யும் இடதுகை”.
நெருங்கிய உறவினர் இல்லாத ஒருவர் மரணத்தை எதிர்பார்த்து தமக்குத்தாமே பல மலர்வளையங்களை வாங்கி, அவற்றில் கற்பனையான உறவுமுறைகளை எழுதிவைத்த சோகத்தை சொல்லும் “எங்கள் சிறந்த வாடிக்கையாளர்”. இக்கதைகளை எந்த மொழியில் கொண்டு சென்றாலும் வாசகருக்கு எளிதில் போய்ச்சேரும்.
சிறுகதைகளை பொருத்தவரையிலும் நான் படித்து ரசித்தவற்றை என் நண்பர்களோடும் பேராசிரியர்களோடும் பகிர்ந்து கொள்வேன். நான்அடிக்கடிசந்திக்கும்என்பேராசிரியர்கள்கிருஷ்ணமூர்த்தி, ராஜா, இலக்கியநண்பர்களானஎழுத்தாளர்கள்கி.ரா, பிரபஞ்சன், செயப்பிரகாசம்,பசுபதி,பஞ்சாங்கம்,நாகரத்தினம்கிருஷ்ணாபோன்றோரிடம்உரையாடும்போதுகதையின்உள்ளடக்கத்தைசொல்வேன்.மொழிபெயர்க்கஎண்ணியிருக்கும் கதை தமிழ் வாசகர்களை ஈர்க்குமா என்பதை தெரிந்துகொள்ள இது எனக்கு உதவிபுரிந்தது. இதே போன்ற கதையை நான் ஏற்கனவே படித்திருக்கிறேனே என்று யாராவது ஒருவர் சொன்னால் அவர் குறிப்பிடும் கதையை ஒப்பிட்டு பார்த்து நான் தேர்ந்தெடுத்துள்ள படைப்பில் கொஞ்சமாவதுபுதுமை இருந்தால் மட்டுமே மொழிபெயர்க்கத் தொடங்குவேன்.

 சில பண்பாட்டுக்கூறுகள் வாசகர்களுக்கு புரியாமல் போக வாய்ப்புண்டு. அத்தகைய நேரங்களில் எப்படி எதிர்கொள்வீர்கள்?
அதுபோன்ற சமயங்களில் ஒன்றிரண்டு அடிக்குறிப்புகள் தேவைப்படும். அவை அதிகமானால் மொழிபெயர்ப்பு பிரதிக்கு ஆய்வேட்டு முகம் வந்துவிடும். அவற்றை அறவே ஒதுக்கி விட்டாலும் முகம் மங்கலாக தெரியும். இதுபோன்ற இக்கட்டைத் தவிர்க்கவே மொழிபெயர்ப்புக்கான படைப்புகளைத் தெரிவு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
 ஒரு படைப்புக்கு ஒரே மொழி பெயர்ப்புதான் சாத்தியமா?
அப்படி சொல்லிவிட முடியாது. எப்படி ஒரு நிகழ்ச்சியை ஒவ்வொருவரும், அவரவர் பாணியில் விவரிக்கிறார்களோ, அப்படித்தான் இதுவும். ஒரே சம்பவத்தை, ஒரு செய்தியை உங்கள் அப்பாவிடம் ஒரு விதமாகவும், உங்கள் பேரனிடம் வேறு வழியிலும் விளக்குவதில்லையா.எண்ணங்களை வெளிப்படுத்துவதில்,ஒரே மொழிக்குள் இப்படி வேற்றுமைகள் இருக்கும்பொழுது இருமொழி தொடர்புடைய மொழி பெயர்ப்பு எனும் இந்த பரிவர்த்தனையில் நிச்சயமாக, பல மொழிபெயர்ப்புகள் சாத்தியமே. தவிர மொழி பெயர்ப்பாளனின் மொழிப்புலமை, அனுபவம், மொழிபெயர்ப்புக்காலம் எனப்பல அம்சங்கள் மொழியாக்கத்தைதீர்மானிக்கின்றன. எனவே, பல மொழிபெயர்ப்புகள் சாத்தியம் மட்டுமல்ல வரவேற்கத்தக்கதும் ஆகும்.
 இப்படி பல மொழி பெயர்ப்புகளைக் கொண்ட பிரெஞ்சு படைப்பு ஏதாவது இருக்கிறதா?
பலவற்றைச் சொல்லலாம். அண்மையில் என் பேராசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது,மதாம்பொவாரி எனும் பிரஞ்சு புதினத்தின் ஐந்து ஆங்கில மொழி பெயர்ப்புகளைக் காட்டினார். அவற்றில் உள்ள வித்தியாசங்களை ஆய்வு செய்து Guillemin Fletcher வெளியிட்டுள்ள நூலினையும் கொடுத்தார். இந்த ஐந்து மொழி பெயர்ப்புகளைத் தவிர இன்னும் பல மொழிபெயர்ப்புகள் அதே படைப்புக்கு ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. எனவே காலந்தோறும் மாறிவரும் மொழியின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒரே படைப்புக்கு பல மொழிபெயர்ப்புகள் தேவைப்படுகின்றன.

 படைப்பு,மொழி பெயர்க்கப்படும் காலத்திற்கும்உருவான காலத்திற்குமான இடைவெளி அதிகமாக இருக்கும் போது ஏற்படும் சிக்கல்களை எவ்வாறு சமாளிப்பீர்கள்?
உண்மைதான், எந்தப் படைப்பாளரும் அன்றைய வாசகரை மனதில் வைத்தே தன் படைப்பினை உருவாக்குகிறார். அது எழுதப்பட்ட காலத்திற்கும், இன்றைய (மொழி பெயர்க்கப்படும்) காலத்திற்குமான இடைவெளி நீண்டிருந்தால், இன்றைய வாசகர் புரிந்துகொள்ளும் வகையில் மொழி நடையில் மொழி பெயர்ப்பினை மெருகேற்ற வேண்டி இருக்கும். நான் முன்பே சொன்னது போல, ஒரே மொழியை அறிந்தவரும் தன்னை அறியாமல் மொழி பெயர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். அதுபோலவே மொழிபெயர்க்கப்படும் காலத்திற்கு ஏற்ப மொழியாக்க நடையும் மாறுகிறது.
 இதற்கு ஏதாவது சான்று கூறமுடியுமா?
ரஷ்ய படைப்புகளின் மொழிபெயர்ப்பைச் சொல்லலாம்.அண்மையில்சிலபடைப்புகள்நேரடியாகரஷ்யமொழியிலிருந்துமொழிபெயர்க்கப்பட்டுள்ளன.அன்றைய மொழிபெயர்ப்புகளை இப்போது வரும் மொழியாக்கப் பிரதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலே இது விளங்கும். தரமான இலக்கியப் படைப்புகள்பலஆண்டுகளுக்கு முன்பேமொழிபெயர்க்கப் பட்டிருந்தாலும் அவற்றை மீண்டும் இன்றைய தமிழ் மொழிநடையில் வழங்குவதில் தவறில்லை.
 பிரஞ்சு மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்படும் இலக்கியப் படைப்புகள் பெரும்பாலும் ஆங்கில வழியாகவே வந்துள்ளன. உங்களைப் போன்றோர் அம்மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்குக் கொண்டு வருகிறீர்கள். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
எந்த ஒரு பொருளையும் நேரடியாக, முதல் ஆளாக நுகர்பவரின் அனுபவத்திற்கு ஈடாக எதையும் ஒப்பிட முடியாது. அது கைமாறி இரண்டாவது, மூன்றாவது ஆளுக்குப் போகும்பொழுது நிச்சயமாக முதல் நபர் ருசித்த அதே சுவை,அவருக்குக்கிடைத்த அதே அனுபவம் கிட்ட வாய்ப்பில்லை. இங்கு முதல் நுகர்வாளர் மூலப்படைப்பின் வாசகர், அதாவது Native Speaker (படைப்பின் மொழியையே தாய் மொழியாக கொண்டவர்) இப்படைப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் பொழுது அவர் இரண்டாவது நுகர்வாளர் ஆகிறார். ஆங்கில வழியாக வரும்இந்த மொழிபெயர்ப்பு தமிழ் வாசகர்களுக்கானது அல்ல. ஆங்கில வாசகர்களை மனதில் வைத்தே மொழிபெயர்ப்பாளர் இயங்கியிருப்பார். எனவே மூன்றாவதுநுகர்வாளர் என்ற நிலையில் தமிழ் வாசகர்கள் முழுமையான வாசிப்பு அனுபவத்தை இழக்க நேரிடுகிறது

 விளக்கமாகக் கூற முடியுமா?
பிரஞ்சில் இருந்து நேரடியாகத் தமிழில் மொழி பெயர்க்கும்பொழுது மொழி பெயர்ப்பாளருக்குச் சில வசதிகள் உள்ளன. பிரஞ்சு தெரிந்த மொழிபெயர்ப்பாளர் நீ, நீங்கள் போன்ற ஒருமை பன்மை வேற்றுமைகளை அறிந்து இச்சொல்லை மொழிபெயர்ப்பார். ஆனால் இந்த இரண்டு சொற்களுக்கும் you என்ற பொதுச் சொல்லே ஆங்கிலத்தில் உள்ளதால் ஆங்கிலம் வழியாக வரும் தமிழ் மொழிபெயர்ப்பில் மூலப்பிரதி ஆசிரியரின் நோக்கம் வெளிப்படாமல் போய்விட வாய்ப்பு உள்ளது. மொழி பெயர்ப்பாளரின் ஊகம், தெரிவு, அனுபவம் போன்றவையே இச்சொல்லின் தமிழ் வடிவத்தை முடிவுசெய்யும். இப்பிரச்சனை தமிழில் இருந்து பிரஞ்சுக்கு மொழி பெயர்க்கும்போதும் எழும் என்பதில் சந்தேகமில்லை. உதாரணமாக, நம்மிடம் உள்ள அவன், அவர், அவள் போன்றவற்றை மொழிபெயர்க்கும் பொழுது, ஆங்கிலத்திலும், பிரஞ்சிலும் மூலப்படைப்பின் எடுத்துரைப்பைக் கொண்டு வர மொழிபெயர்ப்பாளர் சில உத்திகளைக் கையாள வேண்டியிருக்கும். பிரஞ்சிலிருந்து நேரடியாக மொழி பெயர்ப்பவருக்குச் சில மரபுத்தொடர்களை மாற்ற வேண்டியிருக்காது.
சான்றாக,Il a un bras long, அவன் ஒரு பெரியகை, tu auras la fete உனக்கு கச்சேரி இருக்கு போன்ற சொற்றொடர்கள் பிரஞ்சிலும் அதே பொருளில் வழங்கப்படுவதால் மொழிபெயர்ப்பு எளிமையாகவும் இயல்பாகவும், சுவையாகவும் அமையும்.
மேலும், பெயர்களின் உச்சரிப்பில் பிரஞ்சு தெரிந்த மொழிபெயர்ப்பாளர் முறையாக செயல்படமுடியும்.
பெயர்களின் உச்சரிப்பில் அவ்வளவு கவனம் செலுத்த வேண்டுமா?
கவனம் தேவை என்பது தான் என் கருத்து.
உதாரணமாக, சிலவர்ணனைகளில், ‘இப்படி இவன் எட்டப்பனாக மாறுவான் என்று யாராவது நினைத்திருக்கமுடியுமா?’ என்ற தொடரில் ‘எட்டப்பன்’ எனும் பெயர்எத்தகைய வரலாற்று முக்கியத்துவத்தைப் பெறுகிறது என்பது விளங்கும். அரிச்சந்திரன் போலத்தான் பேசினான் என்ற உவமையிலும் இதே நிலை தான். பிரஞ்சில்,‘Harpagon’ அர்பாகோன் ’ போல் நடந்துகொண்டான் எனும் தொடரில் அர்பாகோன்என்பவன் மொலியேரின் நாடகமொன்றில் பாத்திரம் என்பதும்கருமி எனும் பொருளில் வழங்கப்பட்டு வருவதும் அறியாதவாசகர்களுக்கு அப்பெயர்எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே, பெயர்களை-அவை எந்தநாட்டிலிருந்து வந்தாலும் - உரியமுறையில் பதிவுசெய்வது எழுத்தாளார்களின் கடமையாகிறது. சான்றாக நம் பெயர்களான மாலதியை ‘மலாதி’ (பிரஞ்சு மொழியில் நோய் எனும் பொருள் ) என்றும் சீத்தாபதியை சீதபேதி என்றும் உச்சரித்தால் பொறுத்துக்கொள்வோமா?மூலஆசிரியர்களின்பெயர்களையும்சரியாகஉச்சரிக்கமுயலவேண்டும்.தமிழில்கிடைக்கும்ஒலிச்சேர்க்கைகளைபயன்படுத்திக்கொள்ளவேண்டும்.அல்பெர்கமுய்,ழான்போல்சார்த்ர்,வொல்த்தேர்போன்றவர்களின்பெயர்கள்முறையாகதமிழில்வழங்கவேண்டும்.

 மொழி பெயர்ப்பாளருக்கு இருமொழிகளிலும் திறமைவேண்டும், இதைத்தவிர, நல்ல மொழிபெயர்பாளருக்குத் தேவையான தகுதிகள் என்னென்ன?
பன்மொழிப்புலமை மட்டுமே மொழிபெயர்ப்புக்கு உதவிட முடியாது. மொழிப் புலமை என்பது passport மட்டுமே. அடிப்படைத் தகுதி. முதல் படைப்புகளை மொழி பெயர்க்கும் பொழுது படைப்பு உருவான காலம், இடம் – நாடு கதை மாந்தர்களின் பண்பாட்டுக் கூறுகள் என எல்லாவற்றையும் அறிந்திருப்பது அவசியமாகிறது. எடுத்துக்காட்டாக தமிழில் உள்ள சொற்களான கட்டுக்கழித்தி, ஒத்து ஊதுதல், ஐஸ்வைத்தல், பன்னீர் தெளித்தல் போன்ற சொற்களை எடுத்துக் கொள்வோம். தமிழுக்கே உரிய இச்சொற்றொடர்களைப் பிரஞ்சில் புரிய வைக்க இவற்றுக்கு இணையான பதிலிகளைத்(Equalivalents) தேடியாக வேண்டும். அதேசமயம், அகராதியைமட்டுமேநம்பிசெய்யப்படும்எந்திரமொழிபெயர்ப்பைஏற்றுக்கொள்ளமுடியாது. Spirit is willing but the flesh is weakஎன்பதைVodka is strong but the meat is softஎன்றரஷ்யமொழிபெயர்ப்பைசுட்டிஇதனைவிளக்குவதுண்டு.
ஆனால் சில நேரங்களில், அயல் மொழிகளில் உள்ள மரபுத் தொடரை அப்படியே இறக்குமதி செய்வதையும் பார்க்க முடிகிறது. அவை புதிய வரவாக நம் மொழியில் கலக்கும் வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, சிவப்புக்கம்பள வரவேற்பு (Redcarpet Welcome).அதேபோல், நம்மொழியில்உள்ளபொருள்பொதிந்தமரபுத்தொடர்கள்சிலவற்றைஅங்குகொண்டுசெல்லலாம். இவ்விஷயத்தில் மொழிபெயர்ப்பின் இலக்கு என்ன, அது யாருக்கானது என்பதைப் பொறுத்துதான் முடிவு செய்ய இயலும்.
 பண்பாட்டுக்கூறுகள் என்று எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள்?
ஒரு மொழி சார்ந்த பண்பாட்டின் முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார நிகழ்வுகள் மக்களின் மதம், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் என பல விசயங்களை உள்ளடக்கிய மொழி அறிவு தேவைப் படுகிறது. இவை தவிர மொழியின் புற வெளிப்பாடான உடல் அசைவுகளும் இதில் அடங்கும். எடுத்துக்காட்டாக, பிரஞ்சுக் கதை மாந்தரோடு, தன் ஆள்காட்டி விரலை வலதுகண்ணுக்கு அடியில் வைத்து ஏளனமாக மற்றவரை பார்த்தார் என்றால் என்னை நம்பச் சொல்கிறாயா என்று பொருள் . இதை நேரடியாக மொழிமாற்றம் செய்தால் ‘என் கண்’ என்றுதான் வரும், ஆனால் பிரெஞ்சுப் பண்பாடுகளை அறிந்தவர் மொழிபெயர்க்கும் பொழுது, நம் தமிழ் மொழியில் இதற்கு ஈடான எனக்கு ‘காது குத்தியாகி விட்டது’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்துவார்.

 மொழி பெயர்ப்பில் அடிக்குறிப்புகள் தேவையா?
இயன்ற வரையில் அடிக்குறிப்புகளைத் தவிர்க்கவே நான் விரும்புவேன். காரணம் அவை வாசிப்புக்கு இடையூறாக அமைய வாய்ப்புண்டு. இது தொடர்பாகநொயெல்கொவர்ட் (NOEL COWARD) குறிப்பிடுவதைப் போல் “மாடியில் முதலிரவு நடக்கும் போது, அழைப்பு மணி ஓசையைப் போன்றது அடிக்குறிப்புகள்”. கட்டாயம் தேவை என்றால் அடைப்புக்குறிக்குள் சுருக்கமாகத் தரலாம்.இல்லையென்றால் படைப்பின் இறுதியில் தரலாம்.அடிக்குறிப்புகளைத் தவிர்த்து,வாசகருக்குவிளங்கும்வகையில்பிரதிக்குள்ளேயேசொல்லமுடிந்தால்மிகவும்நல்லது.
 மொழிபெயர்ப்பின் தேவைகுறித்துச் சொல்லுங்கள்.
இங்கே ஒரு செய்தியைக் குறிப்பிட்டாக வேண்டும், மொழிபெயர்ப்பின் உதவியால் பல எழுத்தாளர்களின் படைப்புகள் புகழ் அடைந்துள்ளன. சான்றாக, லூயிலாபோர்க் (Louis Laforgue) எனும் பிரஞ்சுகவிஞர் தம்படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இருந்தார். இவரது கவிதைகளைத்தான் டி.எஸ்.எலியட் அடிக்கடி மேற்கோள் காட்டுவார். பிரஞ்சு வாசகர்களால் அதிகம் கவனிக்கப்படாத, கெளரவிக்கப்படாத இக்கவிஞரை மொழி பெயர்ப்புதான் இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்துவைத்தது. இதேபோல் எட்கர் அலன்போ ஆங்கிலப் படைப்புகளை பிரஞ்சுக் கவிஞர்களான பொதலேர், மலார்மே ஆகியோர் மொழிபெயர்த்தார்கள்பொதலேரின் மொழியாக்கம் தான் சிறந்ததாக கருதப்படுகிறது. இவரது “The Purloined Letter” மறைந்து போன கடிதம் எனும் சிறு கதையைத்தான் புகழ் பெற்ற பிரஞ்சுச் சிந்தனையாளர் ஷாக் லக்கான் அதிகமாகக் கையாள்வார்.எனவே, மொழிபெயர்ப்பின் உதவியால் இருமொழிகளின் இலக்கியக்களமும் விரிவடைகின்றன. புதிய சிந்தனைகள் தோன்றுகின்றன என்பதும் விளங்குகிறது.
 நமது சங்ககாலச் செல்வமான குறுந்தொகையை பிரெஞ்சு மொழியில்பெயர்த்துள்ளீர்கள். அந்தமொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பற்றிச் சொல்லுங்கள்..
எனக்கு மன நிறைவைத்தந்த பணிகளில் ஒன்றாக இந்த மொழிபெயர்ப்பைக் கருதுகிறேன். செம்மொழி தமிழ் உயராய்வு மையத்தின் ஆய்வு திட்டத்தின் கீழ் செய்து முடிக்கப்பட்ட இந்த மொழிபெயர்ப்பு விரைவில் நூல் வடிவம் பெற உள்ளது. மூலப்பாடலின் ஒலி பெயர்ப்பு, துறை, கூற்று, பாடல் ஆசிரியரின் பெயர் ஆகிய தகவல்களுடன் பாடல் வரிகளின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பினை தந்துள்ளேன். மேலும், பாடலில் இடம்பெற்றுள்ள மலர்கள் தாவரங்கள் இவற்றின் பெயர்களை வித்தியாசமான எழுத்துருவில் தந்து அவற்றுக்கான விளக்கங்களையும் அடிக்குறிப்புகளாக இணைத்துள்ளேன். குறுந்தொகை 401 பாடல்களிலும் உள்ள மலர்களின் படங்களை வண்ணத்தில் நூலின் இறுதியில் கொடுத்துள்ளேன். பாடல்களில் உள்ள உவமைகளில் கையாளப் பெற்றுள்ள இப்பூக்களை வண்ணத்தில் பார்க்கும் பிரெஞ்சு வாசர்கர்கள் குறிப்பிட்ட பாடலின் ஆழத்தையும், அழகையும் எளிதாக சுவைக்க முடியும் இது முழுக்க முழுக்க பிரெஞ்சு வாசகர்களுக்கான நூல் என்பதால் சங்க இலக்கியத்தைப் புரிந்து கொள்ள தேவையான தகவல்கள் அடங்கிய முன்னுரையை நூலின் முகப்பில் பதிவு செய்துள்ளேன். குறிப்பாக, வேலன் வெறியாட்டு, மடலேறுதல், பசலை, போன்ற சங்க இலக்கியக்கூறுகளை பிரஞ்சு வாசகர்களுக்கு விளக்க வேண்டியிருந்தது
 இந்த மொழிப் பெயர்ப்பைப் பிரெஞ்சு மொழிக்கு கொண்டு செல்ல பொழிப்புரைகள் எந்த அளவுக்கு உதவி செய்தன?.
எனக்குப் பேருதவியாக இருந்தது உ.வே.சாவின் பொழிப்புரைதான். பெருமழைப் புலவர் சோமசுந்தரனார், ராகவஐயங்கார் ஆகிய பெருமக்களின் பொழிப்புரைகளோடு பல நூல்கள் துணை நின்றன. இப்பணியில்ஈடுபட்டிருந்தபோது, என்னைக்கடந்துசென்றதமிழாசிரியர்யாரும்குறுந்தொகைத்தொடர்பானஏதாவதுஒருசந்தேகத்தைதீர்த்திருப்பார்.இலெனின்தங்கப்பாமுதல்குறுந்தொகைஆ.மணிவரை (நீண்டபட்டியல்)பலதமிழ்ப்பேராசிரியர்கள்எனக்குதேவையானவிளக்கங்களைதந்துஉதவினார்கள்.
 அண்மையில் செம்மொழி நிறுவனத்தில் குறள் பீடம் பரிசு பெற்ற பிரெஞ்சு தமிழறிஞர் பிரான்சுவா குரோ அவர்களைச் சங்க இலக்கிய மொழி பெயர்ப்புக்கு முன்னோடியாக சொல்ல வேண்டும். பரிபாடலை பிரான்சுவா குரோ அவர்கள் 1968 ஆம் ஆண்டு மொழிபெயர்த்துள்ளார். உங்கள் மொழிபெயர்ப்பை அவரிடம் காண்பித்தீர்களா? படித்து விட்டு பாராட்டினார். சில பாடல் வரிகளில் மொழி பெயர்ப்பை மெருகேற்ற தேவையான ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். நூல் வடிவம் பெறும் பொழுது, நிச்சயமாக அவற்றை நிறைவேற்றுவேன்.
 பிரெஞ்சு வாசகர்களிடம் மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கு வரவேற்பு உள்ளதா?
பிரஞ்சு வாசகர்கள்நேரடியாக மொழிபெயர்க்கப்படும் படைப்புகளுக்கே முன்னுரிமை தருகின்றனர். ஆங்கிலம் உள்ளிட்ட எந்த மொழியின் வழியாகவோ மொழிபெயர்க்கப்படும் படைப்புகள் பிரெஞ்சு வாசர்களை அவ்வளவாக ஈர்ப்பதில்லை.
 சிறந்த மொழி பெயர்ப்பு என்பது எது?
மூலத்திலிருந்து விலகிச்செல்லாத மொழிபெயர்ப்பு சிறந்தது. உண்மைதான் ஆனால் வாசகனிடம் இருந்தும் விலகிசெல்லாததாகப் பார்த்துக்கொள்ளவேண்டும். பிரஞ்சுமொழியில் படித்தவாசகனுக்கு கிடைத்த வாசிப்பு அனுபவத்திற்கு நெருக்கமாக மொழிபெயர்ப்புப் பிரதியைப் படிக்கும் தமிழ் வாசகர்களுக்குத் தர முடிந்தால் அது சிறந்த மொழிபெயர்ப்புதான். தமிழ் வாசகரையும் அகராதியைத் தேடும்படி வைத்து விடக்கூடாது.
 மொழிபெயர்ப்புகளுக்கான தமிழ்ச்சூழல் எப்படியிருக்கிறது?மொழி பெயர்ப்புக்குப் போதிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நினைக்கிறீர்களா ?
வேண்டிய அளவுக்கு நேரடிமொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கை தமிழில் இல்லை என்பது உண்மைதான். இத்துறையில் ஏற்படும் தேக்க நிலைக்குப்போதிய அங்கீகாரம் கிடைக்காமல் போவதுதான்முக்கியமானகாரணம்.பிரெஞ்சுப்படைப்புகளைத் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்ய பிரஞ்சு அரசின் தூதரகம் பொருளுதவி செய்துவருகிறது. இதேபோல் நம் இலக்கியப் படைப்புகளைப் பிரஞ்சு மொழிக்கு கொண்டு செல்லவும் முயற்சிகள் எடுக்க வேண்டும். சாகித்திய அகாடமி போன்ற அமைப்புகளும் இந்திய மொழிகள் எனும் எல்லையை விரிவாக்கி உலக மொழிகளில் நம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தால் நல்லது.
 அயல்மொழி இலக்கியங்களை மொழிபெயர்ப்பதன் மூலம் தமிழ் வாசகர்களுக்குப் புதிய வகையான வாசிப்பு அனுபவம் கிடைக்கிறது. இதைத் தவிர இத்தகைய படைப்புகளால் வேறு ஏதாவது பயன் உள்ளதா?
தமிழ்ப் படைப்புகளைத் தவிர ஏனைய மொழிகளில் உள்ள தரமான இலக்கியங்களை மொழி தெரியாத காரணத்தாலேயே வாசிக்க இயலாத நிலையைப் போக்கும் மகத்தான பணியை மொழிபெயர்ப்பு செய்கிறது. படைப்பாளர்களும் மற்ற மொழிகளில் உள்ள புதிய சிந்தனைப் போக்கை அறிந்து கொள்ள மொழியாக்கங்கள் உதவுகின்றன. பிரஞ்சு இலக்கியப் படைப்புகளுக்குத் தமிழக வாசகர்களின் மத்தியில் எப்பொழுதுமே நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. கல்கி, புதுமைப்பித்தன் தொடங்கி இன்றைய எழுத்தாளர்கள் வரை பிரஞ்சு புதினங்களையும் கதைகளையும் மொழிபெயர்ப்பு வாயிலாகப் பலரும் வாசித்து வருவதை அறிகிறோம். இன்றைய தமிழ் இலக்கிய இதழ்களில் பல பிரஞ்சுப் படைப்புகள் குறித்த விவாதங்களும் கட்டுரைகளும் வருவதைக் காண முடிவதே இதற்குச் சான்று.
 மொழி பெயர்ப்பாளர்,படைப்பாளராகவும் இருக்க வேண்டுமா?
உங்கள் கேள்வியில் மொழி பெயர்ப்பாளர் படைப்பாளராக இருக்க முடியாது எனும் தொனி வெளிப்படுகிறது. மொழிபெயர்ப்பாளரும் ஒரு வகையில் படைப்பாளர்தான் எனும் கட்சியைச் சேர்ந்தவன் நான். படைப்பாற்றல் இல்லாமல் செய்யப்படும் மொழிபெயர்ப்பு வெறுமனே சுவை, சத்து எதுவுமில்லாத நகலாகத்தான் இருக்கமுடியும். கவிதை மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரைமொழிபெயர்ப்பாளர் கவிஞராகவும் இருந்தால் கவிதை நடை இயல்பாக இருக்கும். அதே வேளையில் ஆர்வ மிகுதியில், தன் வரையறையைக் கடந்து, பொறுப்பை மறந்து மூலக் கவிதையின் சாயலில் தன் சொந்தக் கவிதையை எழுதிவிட நேரும் ஆபத்தும் உண்டு. அப்படிக்கிடைக்கும்கவிதைநன்றாகஅமைந்தாலும், அத்தகைய மொழி பெயர்ப்பைத் தழுவல் என்று தான் அழைக்க முடியும்.
ஸ்டெபான்மலார்மேஎனும் 19ஆம் நூற்றாண்டின்புகழ்பெற்ற பிரஞ்சுக்கவிஞர்,எட்கர் அலன்போவின்ஆங்கிலகவிதைகளைமொழிபெயர்த்தார். ஹான்ரிபரிசோஎன்றவிமர்சகர்மலார்மேசெய்தமொழிபெயர்ப்பின்தவறுகளைபோதியஆதாரங்களோடுசுட்டிக்காட்டுகிறார். மலார்மேசெய்தமொழிபெயர்ப்பைஅப்பொழுதுயாரும்சந்தேகித்திருக்கமுடியாது. தவறுநேர்ந்தால், படைப்பாளராகஇருந்தாலும்விமர்சனத்துக்குள்ளாகநேரும்என்பதைமொழிபெயர்ப்பாளர்கள்கவனத்தில்கொள்ளவேண்டும்.
 மொழிபெயர்ப்பாளர், வாசகர் என்ன வேறுபாட்டை உணர்கிறீர்கள்?
ஓர் இலக்கியப் படைப்பை சாதாரண வாசகர் வாசிப்பதற்கும், ஒரு விமர்சகரோ அல்லது ஒரு திரைப்பட இயக்குநரோ வாசிப்பதற்கும் நிச்சயமாக வித்தியாசம் உண்டு. இதே போல் மொழி பெயர்ப்பாளர் ஒரு படைப்பை வாசிக்கும்போது மற்றவர்களைக் காட்டிலும் அதிக ஈடுபாடு தேவைப்படுகிறது. காரணம் இவன் இப்பிரதியை மீண்டும் ஒருமுறை படைப்பதற்காக(Recreation) வாசகருக்கு எனவே இவரது பொறுப்பும் கூடுகிறது. மொழி பெயர்ப்பாளான் படைப்பாளனாகவும் இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு இங்கு மேலும் விளக்கம் கிடைக்கிறது. அதாவது படைப்பாற்றல் இருந்தால்தான் தன்வாசிப்பு அனுபவத்தைவேற்றுமொழியில்வாசகர்களுக்குபரிமாற முடியும்

மூலப் பிரதிக்கு மொழிபெயர்ப்பாளர் எந்த அளவுக்கு நேர்மையாக இருக்க வேண்டும்?
எந்த மொழி பெயர்ப்பாளரும் ஆசிரியரை மிஞ்சவும் கூடாது விலகிச் செல்லவும் கூடாது. மூல ஆசிரியர் நம்முன் இல்லாவிட்டாலும் நம்மை நம்பி அவரது படைப்பை ஒப்படைத்து இருக்கிறார் என்பதை நினைவில் வைத்து மொழிபெயர்ப்பாளர் இயங்க வேண்டும்; எப்படி ஒரு மருத்துவரை, வழக்கறிஞரை, ஆசிரியரை நம்புகிறோமோ அப்படித்தான்மொழிபெயர்ப்பாளரையும் நம்புகிறோம்.எனவே, அவரும் தமக்குள்ள கடமையை உணர்ந்து மூலப்பிரதிக்கு நம்பிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் அடிமையாக இருக்கத் தேவையில்லை. போல்ரிக்கேர் (PAULRICOEUR 1913 -2005) எனும் பிரஞ்சு தத்துவ அறிஞர், தனது “SUR LA TRADUCTION” என்ற நூலில் மொழிபெயர்ப்பாளரின் பணி குறித்த சில விளக்கங்களை தருகிறார் வாசகன் மூல ஆசிரியரிடமும் மூல ஆசிரியரை வாசகனிடமும் அழைத்து வர வேண்டும். இதனைமொழி விருந்தோம்பல்(L’hospitalitélinguistique-LINGUISTIC HOSPITALITY) என்கிறார்.இரண்டு பேரிடமும் வேலை செய்யும் சேவகனைப் போன்ற நிலையில் மொழிபெயர்ப்பாளர் இருக்கிறார். அவர் இருவருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும். எனவே மூல ஆசிரியரிடம் நேர்மையாகவும், வாசகரிடம் பரிவோடும் அணுகவேண்டியது மொழிபெயர்ப்பாளரின் கடமையாகும். ஆகவே எந்த இலக்கிய வகைமையாக இருந்தாலும் தன் எல்லைக்குள் இயங்கத் தெரிந்தவராக மொழி பெயர்ப்பாளர் இருக்க வேண்டும்.
 மூலப் பிரதியின் நடை, மொழி பெயர்ப்பிலும் எதிரொலிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறதே அது முற்றிலும் சாத்தியமா?
ஒரு படைப்பை மொழிபெயர்க்கும் பொழுது மூல ஆசிரியரின் நடையைத் தான் மொழிபெயர்ப்பாளர் பின்பற்ற முயல்வார் என்றாலும் சில நேரங்களில் தன்னை அறியாமல் மொழிபெயர்ப்பாளரின் நடை மொழியாக்கப் பிரதிகளில் தலை நீட்டி விடும். பேச்சுமொழியில் வர்ணனை, உரையாடல் போன்றவற்றில் இந்தப்போக்கு அதிகமாக வெளிப்படும். எந்த வட்டார வழக்கையும் சாராத (குறிப்பாக மொழிபெயர்ப்பாளரின் சொந்த பேச்சு மொழி) பொதுவான தமிழில் (Standard Tamil) மொழிபெயர்ப்பது நல்லது. மொழி பெயர்ப்பு நடையைப் பொறுத்தவரை சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், மூல ஆசிரியரை மொழிபெயர்ப்பின் பிரதியில் பேச வைக்க வேண்டும்.
தமிழில் உள்ள கதை கவிதை உள்ளிட்ட கலை இலக்கியத்துறை பிரெஞ்சு மொழி சார்ந்ததளத்திற்கு ஏற்புடையதாக இருக்கிறதா? அதே போல பிரெஞ்சில் உள்ள கதை கவிதைஉள்ளிட்ட கலை இலக்கியத்துறை தமிழ் மொழி சார்ந்த தளத்திற்கு ஏற்புடையதாகஇருக்கிறதா? ஏனெனில் மொழிபெயர்க்க வேண்டும் என்பதற்காகவே ஏதோ ஒன்றைமொழியாக்கம் செய்யும் போக்கு, அண்மைக்காலங்களில் இணையதளங்களின் தகவல்தொழில்நுட்பம்வளர்ந்த பிறகு அதிகமாகிக் கொண்டிருக்கிறது இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒருமொழியில்வெளிவரும்எல்லாபடைப்புகளுக்கும்அடுத்தமொழியில்அதேவரவேற்புகிட்டும்என்றுஎதிர்பார்க்கமுடியாது. எந்தபடைப்புஏற்புடையதாகஇருக்குமோஅதனைமொழிபெயர்க்கவேண்டும். நம்இலக்கியபடைப்புகளைஅறிமுகம்செய்யும்நோக்கத்தோடுபிரான்ஸில்வாழும்நண்பர்நாகரத்தினம்கிருஷ்ணாவுடன்இணைந்து “chassecroisefranceinde’ எனும்வலைப்பூஒன்றைபிரஞ்சு மொழியில்நடத்திவருகிறோம்.இதில், கதை, கவிதைதவிரதமிழ்ப்படைப்புகள்குறித்தபிரஞ்சுக்கட்டுரைகளும், தமிழர்கள்எழுதும்பிரஞ்சுப்படைப்புகளும்இடம்பெறகின்றன.


அதிநவீனப் போக்குகளுக்கெல்லாம் முன்னோடி பிரெஞ்சு மொழி இது.பின்நவீனத்துவப் போக்குக்கு முன்பே புதிய அலை என்ற உலகப் புகழ் பெற்ற நவீனகலை இலக்கிய வடிவத்தைத் தோற்றுவித்த மொழி இது. எழுத்தில் அலென்ரோப்கிரியேவிலிருந்து ஜார்ஜ் பெரக் வரை நவீன வடிவத்தை உருவாக்கிக்கொண்டேயிருந்தார்கள். தற்கால எழுத்தாளர்களில் அதுபோன்ற ஒரு போக்குஉருவாகிக் கொண்டிருக்கிறதா?

அப்படிக்குறிப்பிட்டுஓர்இலக்கியவகைமையைசொல்லிவிடமுடியாது.ஆனால், 21-ஆம்நூற்றாண்டின்தொடக்கத்தில், மாயஎதார்த்தவாதம்எனும்இலக்கியக்கோட்பாட்டைமுன்வைத்துசிலஎழுத்தாளர்கள்தங்கள்படைப்புகளைஅளித்தனர்.மரிஎந்தியாயே, வெரோனிக்ஓவால்தேபோன்றோர்இவ்வகைமையைச்சார்ந்தோர்.செர்ழ்துப்ரோவஸ்கிதன்புனைவுஎனும்புதுவகைஎழுத்தை 1977-இல்அறிமுகம்செய்தார்.ஆனிஎர்னோ,அலிஸ்பெர்னேபோன்றஎழுத்தாளர்கள்இவ்வகைப்படைப்புகளைவழங்கினார்கள்.
இலக்கியத் திறனாய்வு உலகில் பல புதிய போக்குகள் தோன்றியுள்ளன. அமைப்பியல்(ஸ்ட்ரக்சுரலிசம்) மார்க்சியவாதம், உளவியல்வாதம், கட்டுடைப்புவாதம் போன்றவை இவற்றுள் அடங்கும். இக்கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கியவர்களில் ரொலான்ட் பார்த் (1915-1980), குலொது லெவி ஸ்த்ரோஸ் (1908-2009),கஸ்தோன் ப்ஷ்லார்; (1884-1962), லுயிசியன் கோல்ட் மான் (1913-1970), லூயி அல்துசார் (1918-1990), ழாக் தெரிதா (1930-2004), ழாக் லக்கான் (1901-1981) ஆகியோரைச் சுட்டலாம்.
இவர்களைத்தவிரபிரான்சிற்குவெளியேமரோக்கா, துனீசியா, அல்ஜீரியாபோன்றபகுதிகளில்வாழும்அமாதுகுருமா, தாகர்பென்ஜெலூன், அமீன்மலூப், அசியாஜெபார்போன்றஎழுத்தாளர்களும்கவனிக்கத்தக்கவர்களாகஇருந்துவருகின்றனர்.
அதிகம்விற்பனையாகும்நூல்களின்அடிப்படையில், இன்றையபிரஞ்சுவாசகரின்ரசனையைஅளவிடமுடியும்என்றால், அப்பட்டியலில்கியோம்முய்சோ, மார்க்லெவி,கத்தெரின்பான்கொல், மிஷெல்ஊல்பெக்,ழீல்லெகார்தினியே, பிரான்சுவாஸ்புர்தன், செபாஸ்த்தியன் ழப்ரிசோ, அன்னா கவால்தா, அமெலி நொதொம்ப்எனப்பலர்உள்ளனர்.

பிரெஞ்சு மொழி தவிர ஆங்கில மொழியாக்கமும் செய்கிறீர்கள். இதில் எதுஉங்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது? இந்த வேறுபாட்டை எப்படிஉணர்கிறீர்கள்?
நான்அதிகமாகமொழிபெயர்ப்பதுதமிழ்,பிரஞ்சுதான்என்றாலும், என்னைமுதன்முதலில்மொழிபெயர்க்கஊக்கமளித்தஎன்ஆங்கிலப்பேராசிரியர்ராஜாஅவர்கள்Transfireஎனும்இதழுக்குஆசிரியரானபின்அவரதுஊக்கத்தால், ஆங்கில மொழியாக்கமும்செய்யத்தொடங்கினேன். ஆங்கிலத்திலிருந்துதமிழாக்கமும்செய்வதால்ஒருவகையில்என்ஆங்கிலமொழித்தொடர்புதொடர்வதற்குவழிசெய்கிறது.
பிரெஞ்சு கவிதைகள் மற்றும் அய்க்கூ கவிதைகளை தமிழில் மொழியாக்கம் செய்கிறீர்கள்
அந்த அனுபவம்?

ராபர்ட் ப்ராஸ்ட் சொல்வதைப் போல், “Poetry is what gets lost in translation”. கவிதையின் மொழிபெயர்ப்பில் வடிவம், பொருள், ஓசைநயம் என பல அம்சங்களில், சிக்கல் ஏற்படும்.
எனவே, எளிமையாகவும்செறிவாகவும்உள்ளகவிதைகளையேதெரிவுசெய்துமொழிபெயர்த்துள்ளேன்.வெரொனிக்தாட்ஜோ, அமாதுஅம்பாத்தேபா, சால்மாகர்மாதி, மொரீஸ்கர்மேல், பிராசான்ஸ்,ப்ரேவேர்எனபலரின்கவிதைகளைமொழியாக்கம்செய்துள்ளேன். தமியன்கப்ரியெல்ஸ்என்பவரின்ஹைக்கூ கவிதைகளை தமிழில் மொழியாக்கம்செய்துள்ளேன். அவரதுஹைக்கூ கவிதைகளின்தொகுப்புஒன்றைகொண்டுவரும்எண்ணமும்உள்ளது. சுருக்கமாகவும், சுவையாகவும்உள்ளதால்கவிதைகளைபுரிந்துகொள்வதில்புரியவைப்பதில்சிக்கலில்லை.தமிழிலிருந்தும்பஞ்சாங்கம், சீனுதமிழ்மணிஉள்ளிட்டவர்களின்கவிதைகளைமொழிபெயர்த்துள்ளேன்
“தமிழ் மொழி இந்தியாவின் மொழிகளுள் மிகவும் பழமையானது. அதுவே முதன்மொழியாயும் இருக்கலாமென நான் நம்புகிறேன். அஃது உயர்தனிச் செம்மொழி. அம்மொழியை நெடுங்காலத்திற்கு முன்னரே பிரஞ்சுக்காரர் கற்றிருத்தல் வேண்டும். அப்படிச் செய்யாமல் போனது ஒரு பெருங்குறையே. தமிழர்களின் வாழ்க்கை நலன்களைப் பிரஞ்சுக்காரர் அப்பொழுதே தெரிந்துகொண்டிருக்கலாம். அப்படித்தெரிந்து கொள்ளாத ஒரு பெருந்தவற்றை அவர்கள்நெடுங்காலம் வரை செய்துவிட்டார்கள்.” என்று பிரஞ்சுமொழிஅறிஞர்பியர்மேய்ல் 1911-1963 கூறுகிறார்.பிரஞ்சும்தமிழும்அறிந்தவர்கள்நிறைந்திருந்தகாலகட்டத்தில்புதுச்சேரியில்அதிகமாக மொழிபெயர்ப்புகள் வந்திருக்கவேண்டுமே?
புதுச்சேரியில்பிரஞ்சுஆட்சிநடைபெற்றபோது, தமிழ்பிரஞ்சுஇலக்கியப்பணியாகமொழிபெயர்ப்புகள், நூலாக்கங்கள்ஓரளவுநடைபெற்றன.ஞானுதியாகு, மரியதாசுப்பிள்ளை, சவராயலுநாயகர், தேசிகன்பிள்ளை,எதுவார்அரியேல்,ழூலியன்வேன்சோன், அதாம், பரஞ்சோதிரொலன், துரைசாமிப்பிள்ளை, காரவேலன், காரைசிபி, வேலாயுதனார், அடுத்ததலைமுறையில், ழான்பிலியோசா,பிரான்சுவாகுரோ, பட்டாபிராமன், தேசிகன், வாணிதாசன், அலேன்தணியேலு, தாவிதன்னுசாமி, முருகேசன், ஞானசம்பந்தன்,துரைசாமிநாயக்கர், லெயோன்ஸ்கதலீஸ்,மதனகல்யாணி, மதனகோபாலன், கிருஷ்ணமூர்த்தி, ராசகோபாலன், வெங்கடேசன்,வைத்தி,கிருஷ்ணசாமி, ஸ்ரீராம், வெங்கட்டராமன், மரி பியர்ஒகுய்ஸ்தேன், பக்தா,பன்னீர்செல்வம், ஜெயராஜ்டேனியல், திருமுருகன்ஆகியோரும்குறிப்பிடத்தக்கவர்கள். மேலும், பிரான்சில்வாழும்ஒர்சேகோபாலகிஷ்ணன், நாகரத்தினம்கிருஷ்ணா, முடியப்பநாதன், அப்பாசாமிமுருகையன், மொரே, போல்மிரியல், எலிசபத்சேதுபதி, ழான்லுயிக் ஷெவியார், முத்துக்குமாரன்சங்கிலி, கீதா,சண்முகசுந்தரம், நாகராஜன்போன்றோர்மொழிப்பாலம்அமைக்கும்பணியில்தங்களைஇணைத்துக்கொண்டவர்கள். இவர்களுடையபடைப்புகள்குறித்துபேசநிறையஇருக்கிறது.

நீங்கள்குறிப்பிடும்அன்றையஅறிஞர்களின்நூல்கள்எங்குகிடைக்கும்?

பலநூல்கள்அறிமுகமாகாதநிலையிலேயேஇருக்கின்றன. காரணம், அவைவெளியானகாலத்தில்இன்றுபோல்ஊடக,விளம்பரவசதிகள்இல்லை. சிலநூல்கள்இப்பொழுதுகிடைப்பதில்லை. பலநூல்கள்புதுச்சேரிபிரஞ்சுநிறுவனத்திலும், பிரான்ஸ்நூலகங்களிலும்இருக்கின்றன. அவற்றைமீண்டும்பதிப்பித்துபாதுகாக்கவேண்டியதுநம்கடமை.

தமிழகத்தில்மொழிபெயர்ப்புகளுக்குவரவேற்புஎப்படிஇருக்கிறது?
நல்லமொழிபெயர்ப்புகளுக்குஎங்கும்வரவேற்புஇருக்கும்.பலஇலக்கியஇதழ்கள்மொழிபெயர்ப்புகளைத்தொடர்ந்துவெளியிட்டுவருகின்றன.தமிழிலிருந்துபிரஞ்சுக்குமொழிபெயர்க்கபடும்படைப்புகள்Le trait d’union, la rencontre avec l’Indeபோன்றஇதழ்கள்வெளியிடுகின்றன.மேலும்வரவேற்புகிடைக்கும்படியானமொழிபெயர்புகள்அதிகஅளவில்வரவேண்டும்.



23.10.15

"ஒரு மொழியில் வெளிவரும் எல்லா படைப்புகளுக்கும் அடுத்தமொழியில் அதே வரவேற்புக் கிட்டும் என்று எதிர்பார்க்க முடியாது. எந்த படைப்பு ஏற்புடையதாக இருக்குமோ அதனை மொழிபெயர்க்க வேண்டும். நம் இலக்கிய படைப்புகளை அறிமுகம் செய்யும் நோக்கத்தோடு பிரான்ஸில் வாழும் நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவுடன் இணைந்து 'chassecroise franceinde' என்னும் வலைப்பூ ஒன்றை பிரஞ்சு மொழியில் நடத்திவருகிறோம். இதில், கதை கவிதை தவிர, தமிழ்ப் படைப்புகள் குறித்த பிரஞ்சுக் கட்டுரைகளும், தமிழர்கள் எழுதும் பிரஞ்சுப் படைப்புகளும் இடம்பெறுகின்றன." - குமுதம் தீராநதி அக்.2014 நேர்காணலில் நண்பர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர், புதுச்சேரிdiv dir="ltr" style="text-align: left;" trbidi="on">

6.9.15

எம் கெழுதகை நண்பர் பேராசிரியர் பொன். பத்மநாபன், காரைக்காலிலும் புதுச்சேரியிலும் என்னுடன் நெடுங்காலம் பணியாற்றியவர். கேடு வருங்கால் கைகழுவி உடல்நழுவும் நட்புகள் நிலவும் இந்த உலகத்தில், 1.பல்கலைக் கழகம், 2.துறை, 3.பணிவாழ்க்கை என்ற மூன்று நிலைகளிலும் ஆபத்து வந்தபோது கைகோத்து உடன்நின்று உதவிய செம்மல் இவர். பணிநிறைவுக்குப் பின் ‘அகத்தியமான தனிமை’ எனக்கு வேண்டும் என்று கருதி, ஒதுங்கி வாழ்ந்தவர். எங்கள் நண்பர் முனைவர் & முதல்வர் திரு ப. சுதந்திரம் Sudhanthiram Pachiappan அவர்கள், பொன். பத்மநாபனின் கைப்பேசி எண்ணைக் கேட்டபோது என்னிடம் அவர் எண் இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நான், காரைக்காலில் ஓரிரு பேராசிரியர்களை இது தொடர்பாகக் கேட்கிறேன் என்று தெரிய வந்தபோது, நண்பர் பிரெஞ்சுப் பேராசிரியர் முனைவர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகரிடம் வயணம் சொல்லி விடுத்தார். இப்பொழுது எங்கள் பேரன்பர் முனைவர் செல்வப்பெருமாள் கையில், இதனுடனுள்ள படங்கள் சுட்டும் ஐந்து நூல்களையும் தந்தனுப்பினார். நேற்றிரவு நூல்கள் என் கைக்குக் கிடைத்தன. இனிமேல்தான் வாசிக்கத் தொடங்கவே வேண்டும்.

8.8.15

இனிமையான எளிமையான தனித்தமிழ் எண்சீர் மண்டிலங்களால் தமிழ நம்பி ஐயா படைத்துள்ள 'விடுகதைப் பா நூறு', இவ்வகையில் தமிழில் முதனூல்!

2.8.15

விளம்பி நாகனார் என்ற தெளிவான புலவர்

விளம்பி நாகனார் குறித்து மிகுதியும் கூற வேண்டுவதில்லை. கீழ்க்கணக்கு நூல்களில் அடி அளவால் நாலடியார் பெயர் பெற்றதுபோல், நவில்பொருள் அளவால் - 'நான்மணிக் கடிகை' எனப் பெயர் பெற்ற நூலின் பாக்களை இயற்றியவர். [இத்தொகுப்பில் ஒவ்வொரு பாட்டும் - 'நான்கு இரத்தினத் துண்டங்கள்' [ - கொண்டது] என்பது நூற்பெயரின் பொருள். நூல் முழுவதையும் வாசிக்கச் செய்வதே நம் நோக்கம் ஆதலால், மூன்றே பாக்களின் பொருளை மட்டும் இங்கே தருகிறேன். 54ஆம் பாடற்பொருள்: "எவருக்கும் - கண்ணை விடவும் சிறந்த உறுப்பு வேறேதும் இல்லை; வாழ்க்கைத்துணையை விடவும் சிறந்த உறவினர் வேறு எவரும் இலர். பெற்ற பிள்ளைகளை விடவும் பெருஞ்செல்வம், வேறு எதுவும் இல்லை. தன்னைப் பெற்ற தாயை விடவும் உண்மையாக வேறொரு கடவுள் இல்லை." இன்னொரு பாட்டு சொல்கிறது: "இனிது உண்பான் என்பான் [ஒன்றின்] உயிர் கொல்லாது உண்பவன்; முனிவன் என்பான், தன் அடையாளம் மறைத்து வாழ்பவன்; [உண்மையிலேயே] தனிமையானவன் எவன் - என்றால், எவருக்கும் எந்த நன்மையும் செய்யாது தனக்காக மட்டுமே வாழ்பவன்; [எல்லோருக்கும்] இனியவன் என்பவன்,யார் யாரே ஆனாலும் அவர்களிடம் சாதி முதலான பேதம் பார்க்காமல் ஒருவரேபோல் கருதி நடந்துகொள்ளும் ஒழுக்கம் கொண்டவன்." 101 ஆம் பாடல்: "மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள் - தனக்குத் தகை சால் புதல்வர்; மன[து]க்கு இனிய காதல், புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும், ஓதின் - புகழ் சால் உணர்வு." #டான் பிரவுன் படைத்த 'ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ்' புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். தாய்மொழிவழி சொந்தக்காரரான விளம்பி நாகனார் மனதுக்குள் வந்து அழைத்தார். "கொஞ்சம் இங்கே வந்து இளைப்பாறிச் செல்!" என்று நான்மணிக் கடிகையைச் சுட்டினார். அதனால் விளைந்தது இக்குறிப்பு :-)
[Facebook note of Puducherry Devamaindhan (பசுபதி) on 03/08/2015]

12.7.15

புதுச்சேரி ஒரு புத்தக நகரம்

புதுச்சேரி, ஒரு புத்தக நகரம். குறுகிய பரப்பளவில், ‘நிறைய்ய’ புத்தக விற்பனை நிலையங்கள். ஒரு ‘டூவீலரை’க் கிளப்பிக்கொண்டு, மேற்கே வழுதாவூர் சாலை வழி உள்ளே நுழைந்தீர்களென்றால், சாரம் பாலம் வலது பக்கம் திரும்பினால் கொஞ்ச தொலைவில் இடது பக்கம் மாடியொன்றில் நண்பர் சீனு. தமிழ்மணியின் ‘இலக்கியம்.’ நாகரத்தினம் கிருஷ்ணாவின் புதிய புத்தகங்கள் முதல் எல்லாம் கிடைக்கும். புதுச்சேரியின் வடக்குப் பகுதியிலிருந்து அஜந்தா சிக்னல் வழி நேரே மகாத்மாகாந்தி வீதிக்கு வந்தால், முதல் வலது ஒடிப்பில் சங்கரதாஸ் சுவாமிகள் தெருவில் நண்பர் பாஸ்கரின் ‘பாரதி புக்ஸ்.’ காலச்சுவடு புத்தகங்கள் முதல் சாரு நிவேதிதா’வின் தடிமனான புத்தகங்கள் வரை எல்லாம் கிட்டும். அடுத்த இரண்டாம் தெரு மேற்கு முடுக்கில் ‘கண்ணதாசன் புத்தக நிலையம்.’ இரண்டு தெரு தாண்டினால் அரவிந்து வீதி - ம.கா. வீதி சந்திப்பில் மாடியில் ‘புஸ்தக் மந்திர்.’ பிரபஞ்சன், பாலகுமாரன்... எல்லா நூல்களும். உள்ளே இடது புறம் திரும்பினால் வடக்குப் பார்த்தவாறு ‘அமுதம் புத்தகக் கடல்.’ தொல்காப்பியம்,சங்க இலக்கியம் முதல் உரைகளோடு; சித்தர் இலக்கியம், ஜோதிடத் திண்டுகள் இன்னும் பற்பல. சற்று முன்னாலேயே, ‘வினாயக் புக் பேலஸ்.’ ஒருவழிச் சாலைகள் வழி ‘டைவர்ட்’ ஆகி ஆகி, ரங்கப்பிள்ளை தெருவுக்கு வந்தால் ‘சிறுவர் பூங்கா’ புத்தக நிலையம். கிழக்கே சற்றுத் தொலைவுக்குள் ஆம்பூர் சாலையில், இடது பக்கம் ஒடித்தவுடன், ‘ஹாட்பிரெட்ஸ்’ தாண்டி, மேனாள் முதல்வர் ஜானகிராமன் வீட்டை ஒட்டி ஹிக்கின்பாதம்ஸ். ஆனந்த விகடன் வெளியீடுகளிலிருந்து அனைத்து வகை ஆன்மீக, இலக்கிய, இன்னும் பல. அகராதிகள் பலவகை கிட்டும். வெளியே வந்து பக்கிங்ஹாம் கனால் வலது புறம் திரும்பினால் ‘வாக்.’ ஆசிரமத் தொடர்பானபுத்தகங்கள். கொஞ்சம் வடக்கே, மரீன் வீதியில் ‘சப்தா.’ அரவிந்தாசிரம சம்மந்தமான புத்தகங்கள். கிழக்கே ஆசிரமத்தை ஒட்டி தெற்கே வளைவெடுத்து வந்தால் ம.கா. வீதி பெத்திசெமினேர் பள்ளி எதிர்ப்புறம் ‘ஜம்பு.’ ஜிப்மர் மருத்துவ திண்டுகள் முதல் பழைய தமிழ் ஆங்கிலப் புத்தகங்கள். என்னுடைய 1980 ஆண்டு வெளியீடான ’புல்வெளி’ புத்தகத்தை, கையில் படி(பிரதி) இல்லாததால் இங்கேதான் விலைகொடுத்து வாங்கினேன். பக்கத்திலேயே, ‘பெரிய பார்ப்பாரத் தெரு’ என்றழைக்கப்படும் நீடாராஜப்பய்யர் தெருவைப் பிடித்து, மாதாகோயில் தெருவில் வலது பக்கம் திரும்பினால், கிழக்குப் பார்த்தவாறு ‘ஃபோகஸ்.’ இங்கே கிடைக்காத ஆங்கில பிரெஞ்சு நூல்களில்லை. மாதா கோயில் எதிரிலேயே கொலாஸ் மன்றத்தில் நெடுங்காலமாய்ப் புத்தகக் கண்காட்சி நடக்கிறது. 10% முதல் 55% வரை கழிவுள்ள புத்தக மலைச் சரிவுகள். எப்படித்தான் நடத்துகிறார்களோ. இன்னொரு நிரந்தரப் புத்தக் காட்சிக்கு, மாதாகோயிலுக்கு எதிர்ச் சாலையிலேயே போனால் ‘ஒப்பித்தா’லையும் தாண்டி, அந்தண்டை பழைய ஆர்.டி.ஓ./ வணிக அவைக் கட்டடத்தில் ‘இந்தியன் புக்ஸ்.’ ஒவ்வொரு நாளும் எப்பொழுது மூடுகிறார்கள் என்றே தெரியாது. புலவர் இராசியண்ணன் நூல்களை வாங்கிய வாய்ப்பு அங்கேதான் கிடைத்தது. ஞாயிறு வந்து விட்டால் போதும். புதுச்சேரி நகரின் முதுகெலும்பு போன்ற காந்தி வீதி நெடுக, நாள்முச்சூடும் கூடும் தெருப்புத்தகக் கடைகளில் தமிழ்நாட்டுக் கிளை நூலகப் புத்தகங்கள் முதல் எல்லா மொழிப் புத்தகங்களும் கிடைக்கும். நண்பருக்கோ ஆசிரியருக்கோ அன்பளிப்பாகத் தருகிறோம் என்றிருந்தாலும் முன்னெச்சரிக்கையுடன் பெயர் போடாமல் ‘அன்புடன்,’ என்று கையெழுத்துப் போட்டு அந்தந்த நூலாசிரியர்கள் தரும் புத்தகங்கள் பலவற்றை இங்கே அழகாகப் பார்க்கலாம். நுனி மடியாத புத்தகங்களாய் அவை காட்சி தருவது கொள்ளை அழகு. நம்மேல் ‘அசூயை’ கொண்டு நண்பர்கள் தர தவிர்த்த அழகான வண்ண அட்டைகளுடன் கூடிய புத்தகங்களை அவற்றின் 10% விலைக்கே (கழிவு /discount அல்ல; விலை!) தள்ளும் கடைகள் பல. நான் மட்டும் புதுச்சேரியில் இல்லாமலிருந்தால் கொடுங் குடிகாரனாயிருந்திருப்பேன். இங்கே புத்தகங்கள் என்னைப் படிக்கமட்டுமே விடுகின்றன. செலவும் மட்டு. இதில் முகநூலிலும் நேராகவும் நண்பர்களாயுள்ள நாங்கள் சிலர், புத்தகங்களைப் பரிமாறிக்கொள்கிறது வேறு.
கொஞ்சம் தள்ளி வங்கக் கடல். பழைய மேரி - நகராட்சிக் கட்டடமிருந்த இடம். அருங்காட்சியகம். புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டு இயக்க அலுவலகம். புதுச்சேரி அரசின் நூலகப் புத்தகத் தெரிவுக் குழுவிலும் விருது மதிப்பீட்டுக் குறுங்குழுவிலும், பல ஆண்டுகள், தங்கப்பா போன்ற ஐயாமார்களோடு பணியாற்றினேன். விருது மதிப்பீட்டுக் குழுவில் என்னையும் என் நெடுங்கால நண்பரையும் என்னையும் மோத விட்டுப்பார்த்தார்கள். நடக்கவில்லை. அதனால், கசப்புடன் விலக நேர்ந்தது. அது, ஒரு தனிக்கதை. இப்படி, “சட்டி சுட்டதும் கைவிட்டு விடும்’ பழக்கத்தால், நண்பர்கள் நண்பர்களாகவே தொடர்கிறார்கள்.
என் முதல் புத்தகம் 1976இல் - 100 படிகள் மட்டும் .. இரண்டாவது புத்தகம் 1980இல் 100 படிகள் மட்டும்.. மூன்றாவது புத்தகம் 1993இல் 72 படிகள் மட்டும் இயக்ககம் வாங்கியதாக ஞாபகம். புதுச்சேரி நூலகங்களுக்காக ‘புத்தககங்கள் வாங்குகிற சமாச்சாரத்’தில் “பழம் தின்று கொட்டை” போட முடியாமல் தவிக்கும் நண்பர்கள் சிலர், முகநூலில் மெளனம் காக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றுவதே என் நட்பின் பொறுப்பும் கூட. இந்த ‘லச்சண’த்தில், எனக்கு மிகவும் பழக்கமான பழம்பெரும் கோவை எழுத்தாளர் ஐயாவுக்கு மறுமொழி விடுக்க முடியாமல் ‘இக்கட்டு’ வேறு. இன்னோர் இக்கட்டு, ஆங்கில மொழிபெயர்ப்பு தொடர்பானது. மறைந்த பெரும்பாவலர் செவ்வேள் ஐயா அவர்களின் நூலை ஆங்கிலத்தில் ‘பெயர்க்க’ முன்வந்தவர் “செய்தவற்றை” வெய்துயருடன் செவ்வேள் என்னிடம் சொல்லியிருக்கிறார். எப்படி இதை கோவைப் பெரியவருக்கு மொழிவேன்?
பின்குறிப்பு: இதில், இன்னும் பல புத்தக விற்பனையகங்கள் விடுபட்டிருக்கும். நண்பர்கள் அறிவித்தால் அறிந்து கொள்வேன். நன்றி :)


6.7.15

Facebook Note #3 of Puducherry Devamaindhan 'காஃப்காவின் நாய்க்குட்டி' நாகரத்தினம் கிருஷ்ணா நாவலைக் குறித்த மூன்றாவது முகநூல் குறிப்பு

மிகவும் படித்த பெண்கள் சிலர் - அரசியலை வெறுப்பதும், ஃபாஷன் பற்றியும் நகை துணிமணி பற்றி விவாதிக்க விரும்புவதும் ஆனதுதான் தாம் வாழும் வாழ்வின் நோக்கம் என்று நம்பிக்கொண்டிருக்கையில், இந்த நாவலில் வரும் ஹரிணியையும் பாரதியையும் நித்திலாவையும் கமிலையும் போற்றாமலிருக்க முடியவில்லை. இவர்களில் பாரதியும் நித்திலாவும் - வாழும் கதைமாந்தர் என்பதை ஆசிரியர் உரையின் கடைசியில் அறிகிறோம். ஹரிணியின் சிந்தனையெல்லாம், நானறிந்தவரை, நாவலாசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் சொல்லாடல்களுடன் ஒத்துப்போகக் காண்கிறேன். என் கருத்து தவறாகவுமிருக்கலாம். ஜெயகாந்தன் சொல்கிறாற்போல் வாழ்விலுங்கூட 'தவறுகள், குற்றங்கள் அல்ல' தானே? சரி. ஹரிணி பார்வையில் பிரெஞ்சு வங்கியொன்று அவதானிக்கப்பெறும் விதத்தில், சென்ற கிழமை, புதுவையில் நானே ஒரு வங்கியின் நிகழ்தருணத்தை உணர்ந்து, எதிர்காலத்தில் எப்படியெல்லாம் 'இது' ஆகுமோ என்று அஞ்சியிருந்தேன். அவர்கள் உண்டாக்கிய 'கணினிப் பெருந்திரை விம்பம்' (டோக்கன் தொடர்பானது) என் நெஞ்சின் துடிப்பை என்னையே கேட்க வைத்தது. அநேகமாக அதே வங்கியில், கணக்கு வைத்தோர் இருக்கை ஒன்றில், இந்த செயற்கை 'டென்ஷனேற்றம்' ஒன்றின் நிமித்த காரணமாக, சாய்ந்து நான் இறந்து விடுவேன் என்று நம்புகிறேன். 'லெட்ஜர்'களுடன் புன்னகை செய்த மனிதர்கள் வேலைசெய்த வங்கிகளின் காலத்தில், அப்பாவின் காசோலையைக் கொடுத்துப் பணம் பெறுகையில், உரிய 'கவுன்ட்டர்' மனிதர் என்னைப் பார்த்து, என் படிப்பு விடயமெல்லாம் விசாரித்தறிந்த காலத்திலேயே 'banking' செய்ய வாய்த்திருந்தேன். இந்த விறைப்பெல்லாம் 'செக்யூரிட்டி'களிடம்தான் அப்பொழுது இருந்தன. இப்பொழுது உள்ள மாதிரி இல்லாமல் 'ஜீவன்'கொண்டு அப்பொழுதைய வங்கிகள் இயங்கின. இருக்கட்டும். நம் "ஹரிணி வங்கிக்குள் நுழைந்து ஆறு மாதத்துக்கு மேல் ஆகப்போகிறது. எல்லாமே கணினி மயமாக்கப்பட்டிருப்பது காரணம். இணைய இணைப்பு மூலமே காரியத்தை முடித்துக்கொள்ளும்படி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். இன்றைய மனிதனுக்கு இரத்தமும் சதையுமான மனித உறவுகள் தேவை குறைவு. உணர்வுகளின் எச்சிலோடு உரையாடல், மின் அஞ்சல்கள், சமூக வலைத்தளங்கள், ஸ்கைப்புகள் என்கிற அரூபங்களுடன் உறவாடல். நதி கடலினைத் தேடவேண்டியதில்லை. கடல் நதியினைத் தேடிவரும் காலம். உயிர் வாழ்க்கை அல்ல. பிண வாழ்க்கை. அலுவலகம் போக வேண்டியதில்லை; கடைகளில் தொட்டுப் பார்த்து, நுகர்ந்து சுவைத்து பொருளை உடைமை கொள்ளத் தேவையில்லை. பிறந்த மேனிக்கு கதவை அடைத்துக்கொண்டு கேட்டதைப் பெற்று காலத்தைத் தேய்க்கலாம். ஒற்றை மனிதன், ஓர் இனம், குலக்குறி என்பதான அடையாள முத்திரைகளை அழித்து நிறுவிய ஊரும் சமூகமும் மீண்டும் பூர்வீகத்தைத் தேடிக்கொண்டிருக்கின்றன." இப்பொழுதைக்கு இதுபோதும். வயதான கைவிரல்களும் வயதாகாத மனமும் சண்டைபிடிக்கத் தொடங்கிவிட்டன. 'ஏசர்' - தனது வெப்பப் பெருமூச்சினை, என் இடது உள்ளங்கை மேல் ஊதுகிறது. பிறகு, தொடர்வேன்.

Vishwas Mudadagal எழுதிய Losing My Religion நாவல் தொடர்பான எதிர்வினையாக எனக்கு வந்த மின்னஞ்சலின் பகுதி

“அன்பு ....க்கு,

நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

.. .. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் வாரமும் மாதமும் வருடமும் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே போவதும் இயற்கையின் ஒரு அங்கம் தான். [தகவல் தொழில் நுட்பத் துறை சர்ந்த] நாங்களும் இயற்கையின் பிள்ளைகள்தான். Vishwas Mudagal எழுதிய Losing My Religion நாவலில் என்ன குறை கண்டீர்கள்..?

இன்றைய நவீன தொழில் நுட்பத்தில் திறமையும் புகழும் மிக்க ‘தொழில் முனைவோராக’ வளர்ந்தும், பாழாய்ப்போன mass support இல்லாமல் போவதால், ரிஷி என்னுமொருவன் உடைந்து சிதறிப் போனாலும்; தன் சொந்த நண்பர்களே தன்னை அதைரியப்படுத்தினாலும்; ஓரிரவு trance மாதிரி ஒரு மனநிலையில் 130 கிமீ தொலைவுக்குத் தன் SUV காரை, வழியில் யாரையும் கொல்லாமல் தானும் சாகாமல் ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு விரட்டுவதும்; விடிகாலைக்குமுன் 03 மணிக்கு காவிரியின் கரைமணலில் வானத்தைப் பார்த்துப் படுத்துக் கொண்டு, சின்ன வயதிலிருந்தே தான் மானசீகத் தொடர்பு கொண்டு வரும் நட்சத்திரக் கூட்டத்தைப் பார்த்து, தனக்கொரு அடையாளம் காட்டுமாறு கதறுவதும், அந்தமாதிரி ‘அலெக்ஸ் ‘ அவனுக்கு அடையாளம் காட்டப்படுவதும்; தன்னிடம் சொத்து என்று உண்டேயான ஒரேயொரு SUV ஐயும் விற்றுவிட்டு காசாக்கி.. ஆயிரக்கணக்கிலான கி.மீ. பயணம் செய்து, ஹிமாலயத்தின் சாரல் பள்ளத்தாக்கில், கடல்மட்டத்துக்கு 3029 மீட்டர் உயரமுள்ள மலானா கிராமத்தில், இந்த வாழ்க்கையின் நிதர்சனத்தைப் புரிந்துகொள்கிறானே - அது, இயற்கைதரும் பாடமில்லையா..

இதற்குப் பின்னால், ரிஷியும் அலெக்ஸும் நிகழ்யுகப் பெண்ணான கைரா’வைச் சந்தித்த பிறகு உணர்வது மேன்மைமிக்க வாழ்வில்லையா? ‘பொருளாயத உலகில் அந்த வானத்தின் நட்சத்திரங்களுக்கு ஈடாக உயர்ந்து காட்டுகிறேன் பார்!’ ‘இந்த உலகத்தையே மாற்றிக்காட்டுகிறேன் பார்!’ என்று சவால் விட்டு வாழும் ரிஷி; வற்றிவரண்ட மேலைக்கலாச்சாரத்தையும் -போர்போர்போர் என்று வெறிபிடித்தலையும் சட்டாம்பிள்ளைத்தனமான உள்நோக்கு அரசியலையும் முற்றிலும் வெறுத்து... ‘தன்னிருந்தே தான் விடுபட’ தவம் கொள்வதற்காக, எங்கோ உள்ள இந்தியாவை நேசித்து ஓடிவரும் அறிவியலின் மாற்றுப் பிரதியும் மனிதப் பரிணாம வர்ணமாலையின் முரண்பாட்டுக்குரிய செறிவான தேடலின் பிதாமகனுமான அலெக்ஸ்; இந்த ஆண்கள் இருவரிடமிருந்தும் முழுசாக வித்தியாசமாகி, அன்பு - அழகு - இரக்கம் - கருணை - பாசம் - உள்ளுணர்வு - அறிவான வாழ்க்கை ஆகியவற்றை இயல்பாக வரித்துக்கொண்டுள்ள நவீனப் பெண்மையின் பிரதிநிதியாகும் கைரா. இவர்கள் மூவருக்குள்ளும் மிகவும் எதேட்சையாக, ஏதோ ஒரு - பச்சைக்கண்களுள்ளவர்கள்[Greek Origin] தங்கள் சுயமிழக்காது வாழும் மலானா கிராமத்தில் உருவாகும் அர்த்தமுள்ளதும் ஆழ்ந்ததுமான அன்புகூடிய நட்புக்கும் புரிந்துணர்வுக்கும் இடந்தந்து வாழ்வது வாழ்க்கை..”

[Edited the mail]

5.7.15

நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ (“சே பியா[ன்] அமியபிள் ஆ வூ மிசியே Krishna Nagarathinam B-) ’’)

முந்தி முந்தி மிகவும் விலாவாரியாக எழுதுவேன். நண்பர்களின் புத்தகங்களென்றால் சொல்லவே வேண்டாம். நாகரத்தினம் கிருஷ்ணா படைத்த ‘நீலக்கடல்’ நாவலுக்கும் மதுமிதா தமிழாக்கம் செய்த ராஜா பர்த்த்ருஹரியின் ‘சுபாஷிதம்’ சாத்திரத்துக்கும் மிக விரிவான மதிப்பீடுகளைத் ‘திண்ணை’யில் எழுதினேன். ‘கீற்று’-வில் அயோத்திதாசர் குறித்து எழுதினேன். ‘புதுச்சேரி’ வலையேடு தொடங்கி ‘மரத்தடி’ ‘வார்ப்பு’ ‘திண்ணை’ ‘கீற்று’ முதலான வலையேடுகளில் நீண்ட பயணம். பெண் பெயரில் ‘நிலாச் சாரல்` முதலானவற்றில்.
வாழ்க்கையில் ஒன்றைக் கற்றுக்கொண்டேன். வளவள என்றெழுதுவது கூடாது. திரைப்படம், புதினம் போலவே நம் எழுத்தாடல்களுக்கும் - தொகுத்தல் / Editing மிகமிக அவசியம் என்றெல்லாம் நேரில் பயிற்றுவித்த புதுச்சேரி வானொலியின் மேனாள் ஒருங்கிணைப்பாளரும், என் மேனாள் மாணவருமான திரு சிவப்பிரகாசமும்; தேவமைந்தனின் வலையேட்டு வாழ்க்கைக்குப் ‘பிள்ளையார் சுழி’போட்ட மேனாள் மாணவர் முனைவர் நா. இளங்கோ Ilango Nagamuthu அவர்களும்; வீட்டுக்கு வந்து வலையுலகம் தொடர்பாக எதையெல்லாம் செய்யலாம்,, முக்கியமாக செய்யக்கூடாதவை எவையெவை என்று பிள்ளைக்குக் கற்றுத் தருவதுபோல் கற்பித்த நண்பர் பாவலர் இராஜ. தியாகராஜன் அவர்களும்; துரோணர், ஏகலைவனுக்குப் பயிற்றுவித்தது போல் என் பெயரன் வழி புத்தக வடிவில் அருவமாக இல்லம் வந்து கற்றுத்தந்த Vishwas Mudagal [‘Today what you hold in your hands is the 14th version of the book.’ Author’s note. P. 9. ‘Losing My Religion’ (novel) FINGERPRINT! 2014] அவர்களும் - இந்த ‘சைபர் உலகில்’ எனக்குத் தொடக்கப்பள்ளி முதல் பல்கலை வரையிலான ஆசிரியர்கள்.
அதிலும், முகநூல் போன்ற சமூக வலைதளத்தில் - விடைத்தாள்களை ‘பக்குவமான’ ஆசிரியர்கள் திருத்துவது போலவும்; தமிழ்த் தந்தி [usage of Krishna Nagarathinam] படிக்கும் / பார்க்கும் நண்பர்கள் போலவும்தான் நம் பதிவுகளைப் பாஆஆஆர்த்து Like பதிகிறார்கள் என்பதை நன்கு அறிவேன். இந்த Like போடுவதற்குக்கூட, “பாத்திரம் அறிந்து பிச்சை இடு” என்ற தமிழ் மூதுரையைப் பின்பற்றும் பலரை நான் நன்கறிவேன்.
இதனால்தான், நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ நாவலின் 13 - 308 பக்கங்களான நாவலையும் 309-310 பக்கங்களில் வரும் ‘பிரெஞ்சு சொற்கள்’ பட்டியலையும் விடாமல் வாசித்துவிட்டு, சமைந்துபோய் உடகார்ந்திருக்கிறேன்.[‘சமைந்துபோய்’ - யை, சினிமாப் பாடலாசிரியர்கள் கோணத்தில் கண்டுகொள்ளாதீர்கள்!]
இந்த நேரத்தில் நண்பர் பஞ்சு Panjangam Kaniyappan அவர்களின் திறத்தை என்னால் வியக்காமல் இருக்க முடியாது. நெடுநாள் நண்பராயினும் சற்று விலகி நின்று அவருடைய ‘ விமர்சனப் பார்வை’யையும்; கடகடவென்று எழுதிவரைந்து செல்லும் அரியவகை எழுத்தாற்றலையும் ஆச்சரியத்துடன், லாலி பாப் குவியலை அண்ணாந்து பார்க்கும் குட்டிப் பையனாக வியந்து பார்க்கிறேன். நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘கோபால கிருஷ்ண கெளமுதி’ வரலாற்று நாவலையே காலச்சுவடு அச்சேட்டில், த.ஜெ. பாணியில் சொன்னால் ‘விமரிசையான விமர்சனம்’ செய்தவரல்லவா Panjanganm Kaniappan என்ற ஐடியிலுள்ள பஞ்சாங்கம் என்கிற நண்பர் பஞ்சு!
இது இவ்வாறு இருக்க, எங்கள் புதுச்சேரி முதலியார்ப்பேட்டையைச் சேர்ந்த வாழ்முனி மகன் பாலனுடனும்; தமிழ்த் தந்தியில் ‘நியூஸ்’ வருமளவுக்கு பாலன் தமிழ்முறைப்படி திருமணம் செய்துகொண்ட செக் குடியரசின் குடிமகள் அத்ரியானாவுடனும்; முன்பே நா.கி. எழுத்துவழி பழகிவிட்ட பாரதியுடனும் ஹரிணியுடனும்; சர்சலில் தன் தமக்கையுடன் இரண்டாண்டுகள் வாழ்ந்து, அங்கே இருக்கப் பிடிக்காமல் வெளியேறி, பிரான்சில் வாழ்வதற்கு ஏற்ற அத்தாட்சிப் பத்திரங்கள் கையிலில்லாததால் வழக்குக்கிழுபடும் - 2009 போரில் பெற்றோர்களை இழந்ததுடன் இலங்கை ஆர்மியால் புலிகளியக்கம் சார்ந்தவள் என்று சந்தேகத்துக்காளாகி உயிரையும் உடலையும் அந்த ‘...வர்’களிடம் விட்டுவிடக் கூடாதே என்ற ஆதங்கத்துடன், சகமனிதர்களை மதிக்கும் பிரான்சுக்கு வந்து வாழும் யாழ்ப்பாணவாசியான நித்திலாவுடனும் [குறிப்பாக நித்திலாவுக்கு மொழிபெயர்ப்பாளராக மட்டுமே உதவ வேண்டிய, ஆனால், இனந்தெரியாமல் அவளுக்காகப் பரிந்து பாடுபடும் ஹரிணியும் என்னுடன் வாழும் சகோதரிகளாகவே உணர்கிறேன்]; எனக்கு மிகவும் பிடித்த ‘மனத்தால் பழுத்த’ சாமி உடனும்; லக்னகுமாரனுடனும்; சகஜமான கமீலியுடனும்; ‘அசிஸ்டெண்ட் சோஷியால்’ எலிஸபெத்துடனும் [இதே வகைமாதிரிப் பெண்ணுடன் 1990+இல் நான் மட்டுமல்ல துணைவியாரும் நெருங்கிப் பழகியிருக்கிறார்; இப்பவும் பிரான்சிலுள்ள என் சகலைகொழுந்தியர் குடும்பத்தார்க்கு அவர் உதவி வருகிறார்]; .. இந்தியாவின் வடக்குக் கிராமத்து மங்லி வரை .. ஓ, முக்கியமாக காஃப்காவுடனும் அவருடைய ‘இருப்பை’ப் புத்துயிர்க்கும் நாய்க்குட்டி வரை .. பலருடன் தற்கணம் வாழ்ந்து வருகிறேன். ‘இடைவெளி’ இருந்தால்தானே விரிவாக எழுத முடியும்?
பின்னொரு முறை, இதைத் தொடர்கிறேன். நாகரத்தினம் கிருஷ்ணாவுடன் நான்பழக நேர்ந்ததற்குப் புதுச்சேரி மட்டுமே காரணமல்ல. தகழி முதல் த.ஜெயகாந்தன் வரை; ஜெய்புன்னிசா அக்கா முதல் சகோதரி மதுமிதா வரை அன்புடன் பழகியவன் நான். இவர்களெல்லோரையும் விட நாகரத்தினம் கிருஷ்ணா என்னை இதுநாள் வரை, சகித்துக் கொண்டு, நட்புடன் உள்ளவர் என்பதற்காகவே நான் நிறைய எழுத வேண்டும். எங்கே..


3.7.15

புத்தர் அணுகுமுறை எவ்வளவு மெய்ப்பொருளானது - என்பதற்கு ஆய்வு அறிஞர் குணா மேற்கோள்களுள் ஒன்று!

மெய்ப்பொருள் குறித்து மதவாதிகள் பலவாறாகத் தருக்கம் செய்துவந்த காலமொன்று இருந்தது. அப்பொழுது புத்தர் கருத்துகள் ‘சிம்ம சொப்பன’ங்களாக மாற்று மதத்தவர்க்குத் தோன்றி வந்தன. ஆனால், புத்தரோ எளிய வலியவர். எதையும் அதிரடியாகச் சொல்லாதவர். தடாலடித் தத்துவஞானியல்லர் புத்தர். உண்மையான மெய்ப்பொருளாளர்.
[இனி வருபவை அறிஞர் குணா கருத்துகள்]
ஒரு காலகட்டத்தில் ‘கருத்துமுதல் கூறுகள் பொருள்முதலியலை மறுத்துச் சிறப்புப் பெற்ற’ன. இதற்குச் சான்றாக, ‘புத்தர் பகன்றதாகக் கூறப்பெறுகின்ற விடையைக் குறிப்பிடலாம்.’
வச்சன் என்னும் துறவி கேட்ட கேள்வி:- “இறந்த பின்னர் முனிவர்கள் மீண்டும் பிறக்கின்றனரா?”
புத்தர் பகன்றதாகக் கூறப்பெறுகின்ற விடை:- “ அவன் மறுபிறவி எடுக்கின்றான் எனக் கூறுவது பொருந்தாது. அவன் மறுபிறவி எடுப்பது எடுக்காதது என்னும் இருநிலைக்குமுரியவன் எனச் சொல்வதும் பொருந்தாது. மறுபிறவி எடுப்பதும் எடுக்காததும் என்னும் இருநிலைகளுக்கும் உரியவனல்லன் எனக் கூறுவதும் பொருந்தாது. அவன் மறுபிறவி எடுப்பதில்லை என்று கூறுவதும் பொருந்தாது.”
- என அவர் கூறுவதாக அமைகின்ற கருத்து நம்முடைய தலையைப் பம்பரம் போல் சுழலச் செய்கின்றது. தொடர்ந்து,
“ அனைத்தும் உணர்ச்சிகள்; அனைத்தும் காட்சிகள்; அனைத்தும் முன்னிலைகள்; அனைத்தும் தன்னுணர்வுகள்; அவை யாவும் பிடுங்கி எறியப்பட்ட பனைமரம் போல் துறக்கப்படும்; வேரறுக்கப் பெறும்; பிடுங்கி எறியவும் படும்.”
எனக் கூறுவது கருத்துமுதல் அடிப்படையிலான ‘சார்பியல்’ கோட்பாட்டிற்கே மெள்ள இழுத்துச் செல்கின்றது. அதன் முதிர்ச்சி நிலையே மதியமிகம் படைத்த ‘வெறுமை(சூனியக்)’ கோட்பாடு. “உலகம் நிலையானதென நான் கருதவில்லை; அவ்வுலகம் நிலையில்லாததெனக் கூறவுமில்லை” என புத்தர் வச்சனுக்கு உரைத்ததாக மச்ஃசிம நிகாயம் என்னும் ஈனயான நூல் செப்புகின்ற கூற்றுங்கூட அத்தகைய சார்பியல் கோட்பாட்டிற்கே கொண்டுச் செல்கிறது.” [குணா பயன்படுத்தும்] கலைச்சொற்கள்: சார்பியல் - Relativism. கருத்து முதலியல் - Idealism. பொருள் முதலியல் - Materialism. வெறுமை(சூனிய)க்கோட்பாடு - Nihilism. [முன்னுள்ள கலைச்சொல் Nihilism என்பதை குணா பயன்படுத்தவில்லை.]
அடிப்படை[ஆதாரம்]
ஆய்வு அறிஞர் குணா, ‘தமிழர் மெய்யியல்,’ பொதுமை வெளியீடு, #16, மங்கேஷ் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17.

1.7.15

இது?

“மாப்பிள்ளை! மாப்பிள்ளை!” - நிமிடத்துக்கு மூன்று தடவையாவது ‘மாப்பிள்ளை’ என்று கூப்பிட்டுப் பேசியவர். சிரிப்பும் சுவாரசியமுமாகப் பேசியவர். “அப்புறம்..ஒங்க ஃப்ரெண்டு ஜெயராஜ் நத்தானியல் இப்ப எங்கே இருக்கார்?.." என்ற பாணியில், என் நண்பர்களைப் பற்றியும்; அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் பற்றியும் ஓயாமல் உற்சாகம் கொப்புளிக்கப் பேசியவர். சொந்த ஊர், திருச்சி. என்னுடன் பழகிய ஊர் கோவை. சொந்த வீடு, இயற்கைச் சூழலில், மருதமலை அருகில். உறவினருங்கூட. கோவை ஆர்.எஸ்.புரம் இரத்தின வினாயகர் கோயிலில் அவர் ஆற்றிய ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்க, எப்பொழுதும் கூட்டம் கூடும். கோவை மத்திய சிறைச்சாலையில் திருக்குறள் வகுப்புகள் எடுத்தபோது, என்னையும் அப்பணியில் ஈடுபடுத்தியவர். நல்ல அறிவாளி. ஆசிரிய(ர்)ப் பணியைத் தெய்வமாகக் கருதி வாழ்ந்தவர்.
ஓய்வு பெற்ற பின்னர், ஓர் ஆன்மிக அமைப்பில் சேர்ந்தார். நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அந்த ‘மிஷன்’ வெளியிட்ட புத்தகங்கள் பலவற்றை அள்ளிப் போட்டு, புதுச்சேரிக்கு ‘எடுத்துக் கொண்டுபோய்’ப் படிக்குமாறு கேட்டுக் கொண்டார். அந்தப் புத்தகச் சுமையையும் தூக்கிக் கொண்டு புதுச்சேரிக்குத் திரும்பினேன். படித்தேன். படித்தேன். படித்தேன். ஒன்றுமே என் ‘மண்டை’யில் ஏறவில்லை. ஒருநாள் தொலைபேசியில் பேசும்போது, இங்கே கிழக்குக் கடற்கரைச் சாலையில், அந்த அமைப்பைச் சேர்ந்தவர் ஒருவரின் அலைபேசி எண்ணைத் தந்து தொடர்பு கொள்ளச் சொன்னார். அந்த அமைப்பு வெளியிட்ட புத்தகங்களே என்னை ‘ஒருவழியாக்கி’விட்ட விவரத்தையும்; அவர் அலைபேசி எண் தந்த ந(ண்)பரைச் சந்திக்கத் தயக்கமாகவுள்ள விவரத்தையும் உண்மையுடன் சொன்னேன். “உங்களுக்குப் பிடிக்கவில்லையானால், உங்களுக்குத் தெரிந்தவர்கள் / நண்பர்கள் எவருக்கேனும் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்!” என்று சற்று கண்டிப்பாய்ச் சொன்னார். அவற்றைக் கொடுத்துப் படிக்கச் சொல்லுமளவு எனக்கு ‘ஆகாத’வர்கள் எவரும் புதுச்சேரியில் இல்லை என்பதால், ‘என்ன செலவானாலும் ஆகட்டும்’ என்று அவற்றையெல்லாம் தூதஞ்சலில் அவர் முகவரிக்கு அனுப்பினேன். அவருக்கு அவை கிடைத்து விட்டதை தூதஞ்சல் அலுவலகமும் உறுதி செய்தது. அவ்வளவுதான்...
சில ஆண்டுகளுக்கு முன்பே, ‘மாப்பிள்ளை’ என்று அழைத்து, சிரித்துச் சிரித்துப் பேசும் பழக்கத்தைக் கைவிட்டு விட்டவர், இப்பொழுது, நானே அலைபேசியில் பேசினாலும் எடுக்காமல், ஒரே முறை “எதையும் கடிதமாக எழுதுங்கள்; அஞ்சல் செய்யுங்கள். படித்துக் கொள்கிறேன்.. மின்னஞ்சல் பழக்கமெல்லாம் எனக்கில்லை..” என்று சொல்லி, பேசியை வைத்து விட்டார்.
ஒரு கிழமைக்கு முன் திருச்சிராப்பள்ளியிலிருந்து பேசிய நெருங்கிய உறவினர், "என்ன ..[உறவுப்பெயர்]..! “அவர்” உங்களை விட எவ்வளவு பெரியவர்.. எப்படிப் பயணம் செய்கிறார், எங்களைப் போல, எத்தனை சொந்த பந்தங்கள சந்திக்கிறார்.. அவரப்போய் வேதனைப்படித்திட்டீங்களே.. அவரும் இருக்கார். நீங்களும்தான் இருக்கீங்க.. என்ன பிரயோஜனம்,”.. என்று தொடர்ந்தார்.
தான், என் சிற்றப்பா மகளான அக்காவைத் திருமணம் செய்து கொண்ட பின்னர், பல ஆண்டுகள் என்னுடன் மிக நெருங்கிப் பழகி, தான் ஓய்வுபெற்ற பின்னர், மக்களுக்குப் பயன்படாத ஓர் ஆன்மீக இயக்கத்தில் தான் சேர்ந்து, அவரைப்போல் நானும் என் மனச்சான்றை விட்டு(ற்று)விடாததற்காக, என்னை முற்றிலும் ஒதுக்கி வைத்ததுடன், என் உறவினரிடமும் ‘நல்ல பெயர்’ வாங்கிக்கொள்ளும் அவர் ‘பணி’ வாழ்க!
பத்தாண்டுகளுக்கு முன்னர், சென்னையில், எம் குடும்பத்தை அன்புடன் அரவணைத்துக் காத்த அண்ணன்வழி உறவினரும் பெரியதோர் ஆன்மீக அமைப்பைச் சார்ந்தவர்களே. அது ஆன்மீகம்.
இது?


8.6.15

தமிழ்மணி வி.ஆர்.எம். செட்டியார் அவர்களின் - கீதாஞ்சலி தமிழாக்கம்.

1962 ஆம் ஆண்டில் ஏழாம் பதிப்பைக் கண்டது, தமிழ்மணி வி.ஆர்.எம். செட்டியார் அவர்களின் - கீதாஞ்சலி தமிழாக்கம். காரைக்குடி, செல்வி பதிப்பகம் இதைப் பதிப்பித்தது. அந்தக் காலத்தில், 'பி.ஏ.' என்பதே பெரிய படிப்பு. அதனால்தான் தமிழ்மணி வி.ஆர்.எம். செட்டியார் அவர்களின் பெயருக்குப் பின் 'பி.ஏ.' என்ற பட்டத்தை 1950களிலேயே பதிப்பகங்கள் அச்சிடலாயின. தாகூரின் உணர்வு குன்றாமல், அவருடைய கீதாஞ்சலியின் நூற்று மூன்று கவிதைகளை எளிய தமிழில் செட்டியார் அவர்கள் தமிழாக்கினார். பானைச்சோற்றுக்குப் பதமொன்று இதோ: "எங்கு மனம் பயமற்று விளங்குகிறதோ, எங்கே தலை கம்பீரமாய் நிமிர்கிறதோ, எங்கு அறிவு சுதந்திரத்துடன் பொலிகிறதோ, எங்கு குறுகிய சாதிமதப் பிளவுகளால் உலகம் உடையாமல் உருப்பெற்றிருக்கிறதோ, எங்கு உண்மையின் ஆழத்தினின்று சொற்கள் உதயமாகின்றனவோ, எங்கே தளரா முயற்சி பரிபூரணத்தை நோக்கி கைகளைப் பரப்புகிறதோ, எங்கு பகுத்தறிவெனும் தெளிந்த ஆறு மாண்டொழிந்த பழக்கங்களான பயங்கரப் பாலைமணலில் பாயாது மீள்கிறதோ, எங்கே விரிந்தசிந்தனையிலும் செயலிலும் எனது உள்ளத்தை நினது அருள் இழுத்துச் செல்லுகின்றதோ, அந்தச் சுதந்திர சுவர்க்கத்தில், என் அப்பனே, எனது நாடு விழித்தெழுவதாக!" - கீதாஞ்சலி 35.

31.5.15

நாகரத்தினம் கிருஷ்ணா, ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ மழையும் கடற்கரை மனிதர்களும் - தேவமைந்தன் முகநூல் குறிப்பு

“கோடையில் கடைசிவரை ஏமாற்றப் பழகி, விரக்தி எச்சிலாய் நாக்கில் துளிர்க்கும் மழை. ஆடிமாதத்தில் வீட்டிற்குள் நுழைவதற்குள் இடியும் மின்னலுமாய்ச் சடசடவென்று பெய்து நம்மைத் தொப்பலாக நனைத்துத் தெருவில் புழுதியாய் மணக்கும் மழை. போதும் போதும் என்று புலம்பினாலும் இரவு பகலாக இடைவிடாமல் ஹோவென்று மண்ணில் இறங்கி, ஐப்பசி கர்த்திகை மாதங்களில் பூமியை வெள்ளக்காடாக மாற்றி நொப்பும் நுரையுமாகப் பாய்ந்து கடலை ஆர்ப்பரிக்க வைக்கிற மழையென அப்பாவால் அறிமுகப்படுத்தப்பட்ட மழைதான் எத்தனைவிதம். தனது இறப்புக்கூட ஒரு மழைநாளில் நடைபெற வேண்டுமெனத் தீர்மானித்தவர்போல, இவள் பார்த்துக்கொண்டிருக்க அவர் கடலில் இறங்கியதும், கரையில் நின்று கதறியதும், உப்பிய வயிறும் சிவந்த கண்களும் ஈக்கள் மொய்க்கும் மூக்குமாக வாசலில் கிடத்தியிருந்த அப்பாவை எரிக்க ஈரவிறகிற்கு டின் டின்னாக மண்ணெண்ணெய் தேவைப்பட்டதை அரிச்சந்திரன் கோவிலில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்ததும் நேற்று நடந்ததுபோல இருக்கிறது. மழைகாரணமாக இரண்டு நாட்கள் தொடர்ந்து அவர் உடலை எரிக்க வேண்டியிருந்ததென்று வெட்டியான் சொன்னான். அப்பாவைத் தீயில் எரித்ததைவிட...”
“ஹரிணி!”
“மழையிற் கரைத்திருக்கலாம்” -- கையிலிருந்த நாவலை மூடி விட்டு, தன் பெயரைச் சொல்லி அழைத்த மனிதரை நிமிர்ந்து பார்த்தாள்.”
- நாகரத்தினம் கிருஷ்ணா, ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பக்.70-71



26.5.15

"என்ன பண்ணிக் கிழிச்சீங்க?" - பட்டுக்கோட்டை பாணியில் கேட்கும் 'அதிகம் படிக்காதவர்''...

நடைப்பயிற்சிப்பூங்காவிலோ கடற்கரையிலோ அல்லாமல், காலையிலேயே தனியார் பேருந்துகள் தங்கள் ஆற்றலையெல்லாம் காட்டி விரையும் விமானதளச் சாலையிலும் தொல்காப்பியர் சாலையிலும் [புதுச்சேரி நண்பர்களே! எனக்கு ஒரு சந்தேகம்: நாவலர் நெடுஞ்செழியன் மேனிலைப் பள்ளியும்; புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும் உள்ள சாலை, தொல்காப்பியர் சாலைதானே?] காலை நடைப்பயிற்சிக்குப் போய் வந்து, ஏறுவெயில் வந்துவிடுமுன் 'பண்ணுருட்டிக்காரர் கடை'யில் காய்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் பொழுது, நெடுநாள் பழக்கமான நண்பர் என்னை நிறுத்தி - "ஒங்க தினத்தந்தியிலேயே ஒவ்வொரு செவ்வாக்கிழமையும் 'கல்வி செய்திகள்' என்று தலைப்பு போட்டு "ஆங்கிலம் மிகவும் அவசியம்"ன்னு பக்கத்தையே அடைச்சுட்டு ஒரு தொடரை, 37 வாரமா போட்டுட்டுருக்காங்க. பள்ளி விளம்பரங்கள்'லயோ - " அனைத்துப் பாடங்களும் மிகச்சிறப்பாக ஆங்கிலவழிக் கல்வியில் போதிக்கப்படுகின்றன / A Futuristic English Medium School" - அப்படி'ன்னு பெற்றோரையெல்லாம் இழுத்துட்'ட்ருக்காங்க! இதையெல்லாம் எதிர்த்து ஆக்கபூர்வமா எதையும் சாதிக்காம, ஒண்ணு, நம்ம தமிழரையெல்லாம் பேடி கீடி'ன்னு திட்றாங்க.. இல்லேன்னா, அரசு அங்கீகாரமில்லாத பள்ளிகள தாங்களே திறந்து காசுபாக்க முயற்சிக்கிறாங்க! பாருங்க.. இப்'டியே போனா, "அனைத்துப் பாடங்களும் மிகச்சிறப்பாக ஹிந்திவழிக் கல்வியில் போதிக்கப்படுகின்றன / A Futuristic Hindi Medium School" அப்படீன்னு விளம்பரங்க வரப்போவுது! நம்ம ஜனங்க அந்த பள்ளிகள்'ல பிள்ளங்'கல சேத்த 'லோலோ'ன்னு அலையப் போவுதுங்க!" என்றார். அவர் அதிகம் படிக்காதவர். ஆனால், சொல்லொன்று செயலொன்று என்றில்லாதவர். தன் பிள்ளைகளை அரசுப்பள்ளிக்கு அனுப்புகிறவர். ஒரு கட்சியைச் சார்ந்தவர். எதையும் நேரடியாகப் பேசுபவர். அவருக்கு என்னால் உரிய மறுமொழி சொல்ல ஏலவில்லை. என் பிள்ளைகளை, அரசுப் பள்ளிகளிலேயே படிக்க வைத்தவன் நான். ஆனால், என் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளிலும் நடுவண் அரசுப் பள்ளிகளிலும் சேர்த்துப் படிக்க வைப்பதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாதவன். பேரப்பிள்ளைகளை, என் நண்பர்கள்முன், அவர்களின் பெற்றோர் வைத்த பெயர்களை வைத்தே அழைக்கிறேன். நண்பர் சொன்னதை 'உள்ளதை உள்ளவாறு' உங்கள்முன் வைக்கிறேன். அதற்குத்தானே முகநூல்!

22.5.15

"அற்புதங்கள் கற்பிதங்கள் அல்ல!" - புதுச்சேரி தேவமைந்தன் குறிப்பு, முகநூலில்.

அன்றாட வாழ்வில் நமக்குள் - நம்முடன் - நம்தொடர்பாக நடக்கும் சிறுசிறு அற்புதங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, பெரிய பெரிய பெரிய அற்புதங்களை ஏற்படுத்துவார்கள் என்று நம்பி, அற்பச் சிறுமதி கொண்டவர்களை நாடி நாம் ஓடுகிறோம் - என்று எமர்சன் சொன்னார். சற்றுமுன் என்னைத் தொடர்புகொண்டு அலைபேசிவழி பேசியவரின் பேச்சு யாதுகாரணத்தாலோ தடைபெற்று "அப்புறம் தொடர்பு கொள்கிறேன் ஐயா!" என்று நின்றதும் அற்புதம்தான். இல்லாவிட்டால், இந்தக் குறிப்பெழுத எனக்கு வேறு செவ்வி கிடைக்காது. தமக்குள் முரண்பட்ட நண்பர்களின் பொதுவான ந(ண்)பராக விளங்குவதில் சுகத்தைவிட சோகம் பெரிது. இந்த நண்பர் சொல்வதை அவருக்காகாத அந்த நண்பரிடமும் அவர் சொல்லும் கமுக்கங்களை இவரிடமும் சொல்லி எனக்குப் பழக்கமில்லை. அப்படி, வளரவுமில்லை. முகநூல், இதை உடைக்கிறது. அனாயாசமாகப் பிய்த்துப் போடுகிறது. அதிமுகவைச் சார்ந்த நண்பர் கருத்துக்கு லைக் போட்டதைத் திமுக நண்பருக்கு மட்டுமல்லாமல் பொதுவிலும் பறைசாற்றுகிறது. திமுக நண்பர், "என்ன சார், எவ்வளவு நடுநிலையானவரென்று உங்களை நினைத்தேன்.. தலைவரை அடுத்தடுத்துக் கேலி பண்ணுகிறார் அந்த ஆள்.. அவருக்கு நீங்கள் லைக் போடுகிறீர்களே???" - நியாயந்தான். தன் மேனிலைப் பள்ளியிறுதிக்காலத்தில் நிகழ்ந்த என் தொடர்பான நிகழ்ச்சி முதலாக என்னுடன் நாற்பதாண்டுகளாகப் பழகுவதுடன் வழியில் போக்குவரத்தில் பார்த்தால்கூட வண்டியை ஓரங்கட்டிவிட்டு ஓடிவந்தணைத்துக் கொள்ளும் தோழரின் முகநூல் பதிவைப் பகிர்ந்ததற்காக, எல்லா விடயங்களிலும் என்னைவிடப் பெரியவர், "தேவமைந்தன்! இது உங்கள் முகநூல் கணக்குத்தானே?" என்று ஐயப்படுகிறார். ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விடுகிறேன். 'கண்மறைப்பு'க் கட்டி வைக்கப்பட்ட குதிரை அல்லன் நான். என்னுடன் எனக்குத் தெரிந்து அறுபதாண்டுகளாக நட்புடனிருக்கும் அத்தனை நண்பர்களும் எனக்கு அகத்தியர்கள்தாம். "அரசியல்ல இதுவெல்லாம் சகஜமப்பா!" என 'சூரியன்' படத்தில் கவுண்டமணியின் 'பஞ்ச் டயலாக்' வருமே, அதுபோலத்தான் அரசியல் குறித்த நண்பர்தம் இடுகைகள். இதையெல்லாம் வைத்துக்கொண்டு, என்னை முட்டுச் சந்தில் மாட்டவைத்தடித்தால் நான் எங்கே போவது? நான் Political Science என்ற அரசியலை கோவை அரசினர் கலைக் கல்லூரியில் முதன்மைப் பாடமாகப் படித்தபோதே புனிதமான அரசியல் கோட்பாடுகள் வேறு -நாட்டில் நடக்கும் அரசியல் வேறு என்பதைப் புரிந்து கொண்டவன். என் சீனியரான திரு ஆ. துரைக்கண்ணு, கல்லூரி ஹாஸ்டலில் ஆங்கில 'ஸ்வராஜ்யா' ஏட்டைக் கொடுத்து, " ஆச்சாரியார் ஆங்கிலத்தில் நடத்துகிறார் இதை.. இதையெல்லாம் வாசிக்க வேண்டும் பசுபதி! அப்போதுதான் அரசியல் விளங்கும்!" என்று அறிவுறுத்தியிருக்கிறார். 1965இல் கலைக்கல்லூரி மாணவர்களாக இருந்த எங்களை இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபடவைத்தவர் ஆ. துரைக்கண்ணுதான். அறிஞர் அண்ணாவால்தான் அரசியல் வகுப்பில் சேர்ந்தேன். சென்ற அறுபதுகளில்(1960s) பெரும் அரசியர் தலைவர்களாக விளங்கிய காமராசர், ராஜாஜி, ஜீவா முதலானவர்கள், எங்களைப்போன்ற மாணவர்களிடம் வெகு உற்சாகமாகப் பேசுவார்கள். அறிவுரைப்பார்கள். இந்தக் குறிப்பை நானெழுதக் காரணம், நமக்கு கவிஞர் இன்குலாப் அவர்களின் 'வரமா சாபமா" கவிதைபோல் கிடைத்த முகநூலின் விளைவுகள். நாம் யாருக்கெல்லாம் எதற்கெல்லாம் லைக் போடுகிறோம் என்பதை விலாவாரியாக வெளிப்படுத்துவது - முகநூலுக்கு நாரதம். நமக்கு? பாவேந்தர் பாரதிதாசன் சொல்வதுபோல், " சிரமறுத்தல் வேந்தனுக்குச் சிறியகதை.. நமக்கெல்லாம் உயிரின் வாதை!"

5.3.15

அப்பா, அன்புள்ள அப்பா! (Thanks for the title: Sujatha) - என் முகநூல் பதிவிலும்.

அப்பா, அன்புள்ள அப்பா! (Thanks for the title: Sujatha)
11 February 2015 at 12:25

Thinnai
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60609223&format=html&edition_id=20060922
ஒரு மனிதரின் வாழ்க்கை - பி.கே.அண்ணார்
தேவமைந்தன்

குன்றின்மேல் இட்ட விளக்காக,பரவலாக, ஊடகங்களாலும் விளம்பரங்களாலும் புகழ்பெற்றவர்களின் வாழ்க்கையை அறிவதோடு மட்டும் திருப்தி அடைவதைவிடவும் மேலானது, ஆடம்பரம் இல்லாமல் அகல் விளக்காக வாழ்ந்து, சாதித்து மறைந்த சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளை அறிதல்.
- டேவிட் லிண்ட்சே(David Lindsey)

இலண்டன் மிஷன் ஸ்கூலின் மெட்ரிகுலேஷன் தேர்வில், ஆங்கிலப் பாடத்தில் ஒரே ஒரு மதிப்பெண் குறைந்ததால் தோல்வியுற்ற ஆத்திரம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள சங்கராபுரத்தில் பிறந்து வளர்ந்து கோவையில் படித்த கறுப்பண்ணனை, யாரிடமும் சொல்லாமல் சென்னைக்கு இரயிலேறி ஓடி, அங்கே ஹார்பரில் நங்கூரம் விலக்கிக் கொண்டிருந்த கப்பலொன்றில், அது எங்கு சற்று நேரத்தில் பயணம் ஆகப்போகிறது என்றே தெரியாமல், ஒளிந்துகொள்ளச் செய்தது.

இன்று அந்நிகழ்ச்சி நடந்திருந்தால் அது வேறு கதை. ஆனால் அது நடந்தது, சற்றேறக் குறைய, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்துப் பத்துகளில் என்பதால், மனிதாபிமானத்தோடு வாழ்ந்த ஆங்கிலேயக் கேப்டன் ஒருவரால் கறுப்பண்ணனின் வாழ்க்கை ஆரோக்கியமாகத் திசை திரும்பியது. அவன் ஒளிந்திருந்த இடம் அந்தக் கேப்டனின் அறைக்குப் பக்கத்தில்தான் இருந்தது. வளர்த்துவானேன்?

'அந்தக் காலத்து மெட்ரிக் ஆங்கிலத்தில்' கறுப்பண்ணன் சொன்ன விவரமெல்லாம் கேட்டறிந்த கேப்டன், கறுப்பண்ணனைத் தன்னுடன் இருக்கச் செய்து ஆங்கிலத்திலும் அந்தக் கப்பல் ஏற்றிருந்த "மெர்குயி டின் ட்ரேடிங் கம்பெனி' வியாபாரத்திலும் பயிற்சி கொடுக்கத் தீர்மானித்த சில மணி நேரங்களில் 'பம்பஃஹ்' என்று சிலமுறை ஆரவாரித்தவாறு அந்தக் கப்பல் புறப்பட்டுவிட்டது.

சில காலம் அந்தக் கேப்டனின் அன்பிலும் கண்டிப்பான பயிற்சியிலும் நனைந்து காய்ந்த கறுப்பண்ணனுக்கு, அந்த ஆங்கிலேயன் தொடர்பால் மூன்று கருத்துகள் உள்ளத்தின் ஆழத்தில் சென்று தைத்துக் கொண்டு விட்டன; கடைசிவரை அங்கேயே தங்கவும் தங்கி விட்டன.

முதலாவது, சாதிப்பெயரைத் தன் பெயருடனோ அல்லது தன் பெயராகவோ வைத்துக்கொள்ளக் கூடாது. இரண்டாவது, குருதியைத் தெளிப்பதுபோல் எக்காலத்திலும் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு எச்சிலைத் தரையில் உமிழக் கூடாது. மூன்றாவது, தன்பெயரில் அறிந்தோ அறியாமலோ நிறவெறி சார்ந்த அம்சம் நிலைபெறக் கூடாது.

'கறுப்பு' என்பது தமிழ்நாட்டில் உள்ள கிராம தேவதை என்று அறிந்து கொள்ளாததாலோ, நிறவெறி நிரம்பித் ததும்பிக் கொண்டிருந்த அந்தக் காலத்திலும், தான் ஓர் ஆங்கிலேயன் - வெள்ளையன் என்ற வெறியில்லாமல் 'கறுப்பு' என்றால் கறுப்பினத்தவரையோ ஒடுக்கப்பட்டவர்களையோ குறிக்கும் என்று நினைத்துக் கொண்டதாலோ, அல்லது அதற்கு எதிர்மாறாகக் கறுப்பு நிறத்தைக் கறுப்பர்களின் அடையாளமாகக் கருதி உள்ளுக்குள் வெறுத்திருந்ததாலோ - அந்த ஆங்கிலேயர் மேற்படி மூன்றாவது உணர்வை உள்ளத்துள் விதைத்த விளைவாக, கறுப்பண்ணன் என்ற தன் பெயரை K.அண்ணன் என்று சுருக்கிக் கொண்டும் பெரியதம்பி என்ற தன் தந்தையின் பெயரைப் P என்ற தலைப்பெழுத்தாக முன்னிட்டுக் கொண்டும் P.K.அண்ணன் என்று மட்டும் தன் பெயரைப் பதிவு செய்து கொண்டார். [வளர்ந்துவிட்டார் அல்லவா? அதனால்..'ஆர்' விகுதி.] கப்பல் இங்கிலாந்தில் நங்கூரமிட்டபொழுது கேப்டன் உதவியுடன் பெயர்ப் பதிவு நிகழ்ந்தது.

முதல் உலகப் போரின் பாதிப்புகள் ஐரோப்பாவை விட்டு நீங்காத காலம்...

ஆண்டுகள் சில உருண்டோடின. பர்மாவில் கப்பல் நங்கூரமிட்டபின் பி.கே.அண்ணன் வாழ்வு மீண்டும் திசை மாறியது. முன்பு, சென்னையிலிருந்து வங்கக் கடலில் செல்லும் பொழுது. இப்பொழுது, வங்கக் கடல் வழியே பர்மாவுக்குச் சென்ற பொழுது. கேப்டன் விடை பெற்றுக் கொண்டு கடல்மேல் செல்ல, பர்மாவில் தங்கி, அங்கிருந்த 'மெர்குயி டின் ட்ரேடிங் கம்பெனி'யைக் கவனித்துக் கொண்டார். சில ஆண்டுகளில், தான் நண்பர்கள் சிலர் மூலம் கற்ற பின்னலாடை எந்திரங்களைப் பற்றிய அறிவைக் கொண்டு பர்மாவின் தலைநகரான ரங்கூனில் ஸ்பார்க்ஸ் சாலை 51ஆம் இலக்கமிட்ட - மரக்கட்டுமானமே பெரும்பாலுமான கட்டடத்தில் 'ஓரியண்டல் நிட்டிங் ஃபாக்டரி'’ என்ற பின்னலாடைத் தொழிலகத்தைத் தொடங்கினார். கோவையிலிருந்த தன் பெற்றோரையும் சகோதரர்களையும் ரங்கூனுக்கே அழைத்துக் கொண்டார். சகோதரர்களுக்குத் தன் ஃபாக்டரியில் பயிற்சி தந்து பின்னர் உரிய பொறுப்புக்களையும் தந்தார். அப்பொழுது, பிரிட்டன் பர்மாவை இந்தியாவின் ஒரு பகுதியாகக் கொண்டு ஆண்டுவந்தது. இவ்வாறு நிகழ்ந்த 1937ஆம் ஆண்டுவரை [அதே 1937இல் சுயாட்சியும், 1948இல் முழுச் சுதந்திரமும் பர்மா பெற்றது], கோவையிலிருந்து என்பதைவிடப் பெரும்பான்மையாகச் செட்டிநாட்டுப் பகுதிகளிலிருந்தும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலிருந்தும் பர்மாவுக்குத் தமிழர்கள் பலர் சென்று அங்கேயே தொழில்கள், வணிகமுறைகள் பலவற்றைச் செய்து வளமாக வாழ்ந்தனர்.

தான் நிறுவிய பின்னலாடைத் தொழிலகத்தில், தன் உடன் பிறந்தாருக்கு மட்டுமல்ல உள்ளூர்க்காரர்களான பர்மாக்காரர்களுக்கு முதன்மையான வேலைகள் தந்ததாலும், பர்மியர்களுடனும் அங்கு வாழ்ந்த சீனர்களுடனும் ஒன்றுபட்டுக் கலந்து வாழ்ந்ததாலும் பி.கே. அண்ணன் அவர்களை அவர்கள் மிகவும் நேசித்தார்கள். அதற்கு ஓர் அடையாளம், இத்தனை ஆண்டுகள் கழித்த பின்பும், உள்ளது. புதுச்சேரியில்... பி.கே.அண்ணன் அவர்களின் கடைசி மகனின் வழிப் பேரனார் இல்லத்தில். தேக்கில் செய்யப்பெற்ற திருக்கோயில். மேலே உள்ள மூன்று கும்பங்களையும், நடுவில் உள்ள நான்கு தூண்களையும், தளத்தையும், அடித்தளத்தையும் எளிதாகக் கழற்றி விடலாம்; மீண்டும் பூட்டிக் கொள்ளலாம். நல்ல கனம். ஐராவதி என்ற கப்பலில், இரண்டாம் உலகப் போரின் இறுதியில், ரங்கூன் பி.கே.அண்ணார் [அச்சமயத்தில் அப்படி அழைக்கப்பெற்றார்] அவர்களுடைய குடும்பத்தாருக்குத் துணையாக அந்தக் கோயிலும் சென்னைக்கும், பின் கோவைக்கும் வந்தது. பின்னர், இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் புதுவைக்கும், அடுத்து ஐந்தாண்டுகளுக்குப் பின் காரைக்காலுக்கும், அடுத்தடுத்து ராஜயோகி ரங்கூன் பி.கே. அண்ணாரும் அவர் துணைவியார் தெய்வானை அம்மாள் அவர்களும் 1988ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் சமாதி எய்திய பின்னர் புதுச்சேரிக்கும் துணையாகச் சென்றது. அது தேக்கினால் ஆனது மட்டுமன்று. நல்லதொரு சீன மனிதரின் கலைத் திறனால் ஆனது. புதுச்சேரியில் ஆனந்தாசிரமத்தின் நிறுவனரும் தலைமை யோகியுமான கீதானந்தா அவர்களால் 1970ஆம் ஆண்டில் ‘ராஜயோகி’ என்ற சிறப்புத் தலைப்பு வழங்கிக் கெளரவிக்கப் பெற்றார். இதற்கும் இவர் துணைவியார் சிவதீட்சை பெற்று நாற்பத்தாறு ஆண்டுகள் நியமமான வாழ்க்கை வாழ்ந்தமைக்கும் அருணாசல சுவாமிகள் என்ற துறவியாரே காரணம். வேடிக்கை என்னவென்றால், இவர் வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்புமுனையிலும் உன்னதமும் சத்தியமும் வாய்ந்த துறவியர் சிலர், இவரைத் தளராமல் பார்த்துக் கொண்டு வழிநடத்தியதும்தான். இதற்குச் சரியானதொரு சான்று:

இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில், ஜப்பான் நாடு தன் இராணுவ பலத்தால் அமெரிக்காவையும் அஞ்ச வைத்துக் கொண்டிருந்த காலகட்டம். பர்மாவில் நுழைந்து அட்டகாசம் செய்த ஜப்பான் படைகள், ரங்கூனுக்குள்ளும் புகுந்து சூறையாடின. அங்கே வளமாக வாழ்ந்த தமிழர்களும் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆட்பட்டனர். பானைச்சோற்றுக்கொரு பதமாக, ரங்கூன் பி.கே.அண்ணார் தொடர்பாக நிகழ்ந்த சூறையாடலைப் பார்ப்போம்.

மற்ற தமிழர்களைப் போல, தன் குடும்பத்தார் அனைவரையும் சீனக் கலைஞர் செய்து தந்த தேக்குக் கோயிலையும் கப்பலேற்றித் தாயகத்துக்கு அனுப்பியபின் ஒருநாள் காலை... ஜப்பான் இராணுவம், ரங்கூனுக்குள் புகுந்து சூறையாடத் தொடங்கிய நேரம். ஜப்பான் இராணுவத்தினர் சிலர், இவர் வீட்டுக் காம்பவுண்டுக் கதவுகளை அதிரடியாகப் பெயர்த்துக் கொண்டு வந்தனர். இவரை அழைத்து, இவர் பார்க்கப் பார்க்க, ஷெட்டில் நின்று கொண்டிருந்த - இவருடைய - தட்டெழுதும் வசதி சேர்ந்த [இன்று கார் ஸ்டீரியோ வசதி போல] ஆர்ம்ஸ்ட்ராங் சிட்னி என்ற அந்தக் காலச் சொகுசுக்காரையும் போர்ட் காரையும் வெடிகுண்டு வீசித் தகர்த்து விட்டு - "இனியும் நீங்கள் தாமதித்து இங்கிருந்தால், உங்களுக்கும் இதே கதி நிச்சயம். நாளைக்கு வருவோம்!" என்று எச்சரித்துப் போய்விட்டார்கள்.

நல்ல வேளை. குடும்பத்தார் நிம்மதியாகக் கப்பலில் போய்க் கொண்டிருக்கிறார்கள்... இவருக்கு அந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் சிறந்த நண்பர்கள் இருந்தனர். அவர்களைத் தொடர்பு கொள்ள இவர் போன வழியில் அவர்களே நடைப் பயணமாக, எதுவும் கைகளில் எடுத்துக் கொள்ளாமல், சிரபுஞ்சி வழியாகவும் இந்தியாவின் வடகிழக்கு வாயில் வழியாகவும் தாயகத்துக்கே திரும்பும் நோக்கத்துடன் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுடன் ரங்கூன் பி.கே.அண்ணாரும் நடைப்பயணம் தொடங்கினார். வழியில் 'ஸ்டேட் எக்ஸ்பிரஸ்' சிகரெட் டின்கள் இரண்டில் ஒன்றில் அரிசியும் இன்னொன்றில் உப்பும் தாங்கி நடந்து தின்று உயிர்சுமந்து வந்த போராட்டத்தில், பிழைத்தவர்கள் சிலரே.

இந்தியாவுக்குள் நுழைந்து விட்டபின், மற்றவர்களைப் போல உடனே தென்னகம் திரும்பாமல் ரிஷிகேசத்தில் உள்ள சுவாமி சிவானந்தர் குடீரம் என்னும் குடிலில் ஒரு மாதத்துக்குமேல் தங்கி உள்ளத்தைத் தெளிவாக்கிக் கொண்டார். மாலையிட்டு வழிபடப்பெற்றுக் கொண்டிருந்த தன் படம் இருந்ததும்; கோவை செல்வபுரத்தில் தன் குடும்பத்தார் வாழ்ந்திருந்ததும் ஆன வீட்டுக்கு அவர் போய்ச் சேர்ந்தபொழுது, அக்குடும்பத்தார் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை ஊகிக்கக் கூட முடியாது.

அப்புறமும் தன் குடும்பத்தார் நலத்துக்காக, எழுபத்திரண்டு வயது வரை உழைத்தார். பழைய செல்வ வாழ்க்கை தன்னை விட்டுப் போனபின்பும் மனம் தளராமல் 27 இஞ்ச் பிலிப்ஸ் சைக்கிளில் வேலைக்குச் சென்றதோடு, தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கும் தொடர்ந்து சென்றுவந்தவரை மதித்துப் பாராட்டியவர்கள் - தமிழ்வாணன் முதல் ஆன்மீகப் பேச்சாளர் நா.கிரிதாரி பிரசாத் வரை பலர். இதைவிடவும் வியப்பானது, எந்த பர்மாவிலிருந்து தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்து வந்தாரோ, அதே நாட்டுக்குத் தன் இரண்டாம் மகனார் திரு ஏ.கே. மூர்த்தியும் அடுத்தவர் திரு சிவப்பிரகாசமும் (மீண்டும்) பர்மாவுக்குச் சென்றபொழுது ஊக்குவித்தார். அவர் எண்ணம் போலவே, அவ்விருவரும் மிகவும் சிறப்பாக பர்மாவில் வாழ்ந்தனர். தமிழ்வாணன் தன் 'கல்கண்டு' இதழில் பர்மா ஏ.கே. மூர்த்தி அவர்களின் முயற்சிமிக்க அரிய வாழ்வைப் பற்றி விரிவாக (Profile) எழுதிப் பாராட்டினார்.

இன்னும் சொல்ல எத்தனையோ உண்டு, இராஜயோகியாகத் தன் தொண்ணூற்றாறு வயதில் காரைக்காலில் பச்சூரில் ஒடுக்கமான பி.கே.அண்ணார் வாழ்க்கையில்.

குன்றின்மேல் இட்ட விளக்காக,பரவலாக, ஊடகங்களாலும் விளம்பரங்களாலும் புகழ்பெற்றவர்களின் வாழ்க்கையை அறிவதோடு மட்டும் திருப்தி அடைவதைவிடவும் மேலானது, ஆடம்பரம் இல்லாமல் அகல் விளக்காக வாழ்ந்து, சாதித்து மறைந்த சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளை அறிதல்.

அறிவோம். வாழ்வோம்.

****
karuppannan.pasupathy@gmail.com

Copyright: thinnai.com

என் முகநூல் பக்கத்திலிருந்து மூன்று துளிகள்

"ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்." - உலகநாதனார். இதற்கு, புலவர் குழந்தை அவர்கள் உரை:- "ஒருவர் மேலும் குற்றம் சொல்ல வேண்டாம்... யார் மீதும் குற்றங் கூறக் கூடாது."
# Never blame anybody. - Ulaga Needhi (a didactic literature in Tamil)

எந்தப் பிரச்சினை ஆனாலும் ஒத்திப்போடாதே. சாட்சிக்காரனை நயந்து கொள்ளாமல், சண்டைக்காரனைச் சந்தி. வாய்விட்டுப் பேசு. அவன் பிரச்சினை என்ன என்று கேள். முடிந்தால் தீர்த்து வை. இல்லாவிட்டால் 'bye' சொல்லிவிட்டு வந்துவிடு. - என்று அறிவுறுத்திய தந்தை சொல்லைக் கடைப்பிடித்தே சோதனை பல வென்றேன்..
'Go to the centre. Never compromise. Talk. Win. If you couldn't have chance to talk, BID GOOD BYE to the gentleman. Never turn back. Go on.' - Dad Mr. P.K. Annan

"தெரியாததைத் தெரிந்தது போலப் பேசுவது உமாருக்கு வெறுப்பையே விளைத்தது. அறியாமையினூடே படாடோபமான வார்த்தைகளைப் பேசி நாம் நடிக்கிறோம்." எஸ். வையாபுரிப் பிள்ளை(1951) பாரசிகப் பாவலன் உமர்கயாம் குறித்து.

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே

மற்றவர்கள் நம் மேல் விடும் சாபம் பலிக்கிறது என்றால், நமது மனம் நம்மைவிட அவர்களைத்தான் மதித்து ஏற்றுக் கொள்கிறது என்று அர்த்தம். திடமான மனம் உள்ளவர்கள், மற்றவர்கள் தரும் டென்ஷனை மதிக்க மாட்டார்கள்; டார்ச்சர் கொடுப்பவர்களுக்கு -'சட்டபூர்வமாக' கவுன்ட்டர்-டார்ச்சர் கொடுப்பார்கள். சம்பளம், நம் உழைப்புக்குக் கிடைப்பது. மனநோய் பிடித்தவர்களை நாமே நம் தலைமேல் உட்கார விடுவதற்குப் பிரதியாகப் பெறுவது அல்ல. பொதுத்துறை, தனியார் நிறுவனங்களின் மேலாண் இயக்குநர், தன்னிடம் -'குரூப்' சேர்க்காமல் பணிபுரியும் 'விசுவாசிகளை' 'unskilled'கள் டாரச்சர் பண்ணுவதற்கு மறைமுகமாக உதவினார் என்றால்,தகுதி மேம்பட்ட இன்னொரு நிறுவனம், அந்தப் பணியாளரை 'நேரம் பார்த்து' ஏற்றுக் கொள்ளும். " எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே!" - ஔவையார்.