26.2.13

இணையத்தில் மொழி


"இணையத்தில் மொழிஞாயிறு" என்று உரிய காப்புரிமை பெற்ற என் தரவுத்தொகுப்பை, "பாவாணரும் இணையமும்" என்ற தலைப்பில், வரும் காரி 2/3/2013 அன்று தனித்தமிழ்க் கழகப் பாவாணர் அறக்கட்டளைப் பொழிவாக நிகழ்த்துகிறேன். விடப்படக்கூடாது என்று கருதும் இணையப்பதிவான -100% தலைப்புத் தொடர்பான தங்கள் தரவை, 01/03/13 மாலைக்குள் இதன் கருத்துரைப் பகுதியில் தவறாமல் தருக!

2 comments:

ka.thamizhamallan said...

மகிழ்ச்சி.1972முதற்கொண்டு தனித்தமிழ்க்கொள்கைக்காக நான் ஆற்றும் பணிகள் தங்கட்குத்தெரியும்.என்னால் தொடங்கப்பட்ட தமிழ்க்கழகம்,தமிழ்காவற்குழு,தனித்
தமிழ்க்கழகம்,தனித்தமிழ்இயக்கம்,
தனித் தமிழ்க்கழகத் தொடக்கப்பள்ளி,பாவாணர் நற்பணி மன்றம் முதலிய முயற்சிகளால் செய்த பணிகள் உயர்ந்த விளைவுகளை ஏற்படுத்திய வரலாறும் தங்கட்குத் தெரியும். அந்த
அமைப்புகளில் என்னால் சேர்க்கப்பட்டவர்களுக்குப்பாவாணர் பற்றியும் தனித்தமிழ் பற்றியும் கற்பிக்க நான் ஏற்ற துன்பங்களும் செலவுகளும் மனஅழுத்தங்களும் ஏடு கொள்ளா. என்வளர்ச்சியும் ஏந்துகளும் தடைப்பட்டன. அறியாமையும் காழ்ப்புணர்ச்சியும்குலவெறியும் நிறைந்தவர்களால் அன்பு கொல்லப்பட்டது. நேரிய போக்கும் உழைப்பும் பாழாக்கப்பட்டன.வீண் பகை வளர்க்கப்பட்டது. என்னைத் தவறாகப்புரிந்து கொண்டு தவறான கருத்துக்களை என்மேல் சுமத்திக் குலைத்த நன்றி கொன்றவர்களை என்னென்று சொல்வது? என்நுால்களில் நான் செய்த பணிகள் பதிவாகியுள்ளன. கேட்ட தங்களுக்கு நன்றி.வணக்கம்.

அ. பசுபதி said...

வணக்கம். இடுகை/பதிவு எந்திரவழியில் கூகுளால் அனுப்பப்பட்டுள்ளது. அமைப்புகளில் சீர் செய்துவிட்டேன். தங்களையோ எனக்கு நேரடியாகத் தெரிந்த நம் ஊரகத்தாரையோ உன்னியதன்று இப்பதிவு. முகநூலிலும் டுவிட்டரிலும் உள்ள பாவாணர் அன்பர்களை நோக்கி வேண்டப்பெற்றது இது. "பாவாணரும் இணையமும்" என்பது தலைப்பு. நன்றி!