11.3.13

இரண்டு குறுங்காவியங்கள்: 'காதல் பறவை,' 'பெண்மை போராடுகிறது'

இரண்டு குறுங்காவியங்கள்:

'காதல் பறவை,' 'பெண்மை போராடுகிறது'

முதலாவது 'காதல் பறவை' ஆசிரியர் வில்லிசை வேந்தர் கலைமாமணி இ. பட்டாபிராமன் அவர்கள்.

"சீர்த்த கொள்கைகள் செறிந்த"தாகவும் குமுகாயச் சிக்கல்கள் சிலவற்றுக்குத் தீர்வு தருவதாகவும் இக்குறுங்காவியம் அமைகிறது.

இரண்டாவது 'பெண்மை போராடுகிறது' ஆசிரியர் புலவர் ப. பாவண்ணன் அவர்கள்.

போலிக் கலைகள் காலூன்றிவிட்ட சூழலில், ஊடகங்களில் நிலவும் முதலாளியக் கலைக்கு மாற்றாக, அதன் பிடியிலிருந்து விடுதலை செய்யும் முயற்சியில் உண்மையான கலையின் அடிமை விலங்கு அறுந்திட அடிக்கப்பெறும் சம்மட்டி வீச்சாக இக்குறுங்காவியம் திகழ்கிறது.

தொடர்பு முகவரி:

கலைமாமணி புலவர் இ. பட்டாபிராமன், க.மு., கல்.இ.,
16, வள்ளலார் தெரு,
குயவர்பாளையம்,
புதுச்சேரி - 605 013

தொ.பே: 0413 2245358
அ.பே: 9952449300

5 comments:

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

பட்டாபி ராமா் படைப்புகளைக் கண்ணுற்றால்
கெட்டாவி பொய்யெல்லாம் கீழ்மடியும்! - கொட்டாவி
விட்டவா் துள்ளி விழித்திடுவார்! விற்புகழை
நட்டவா் நற்றமிழை நாடு!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

பிரான்சுவாழ் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களுக்கு நன்றி!

அ. பசுபதி (தேவமைந்தன்) said...
This comment has been removed by the author.
அ. பசுபதி (தேவமைந்தன்) said...

திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி:)